செஃப் தாமுக்கு பிடிச்ச இட்லியில் அஞ்சலி.. அதுவும் எத்தனை கிலோ தெரியுமா! சமையல் கலைஞர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனிதர் மறைந்த பிறகு அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களும், மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த வார்த்தைகளும், அவரை சுற்றிய நினைவுகளும் அப்படியே இருக்கும் என்பதற்கு செஃப் தாமுவுக்கு சமையல் கலைஞர்கள் செலுத்தி இருக்கும் அஞ்சலியே ஒரு உதாரணம். உடல் நலக்குறைவு காரணமாக செஃப் தாமு காலமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், அவருக்கு பிடித்தமான இட்லியிலேயே அவருடைய உருவத்தை உருவாக்கி சமையல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு சமையலையே தங்களுடைய கலையாக கொண்டவர்கள் தங்களுக்கு தெரிந்த கலையின் மூலமாகவே தங்கள் குருவுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். சுமார் 10 கிலோ இட்லியை பயன்படுத்தி தாமுவின் உருவத்தை வடிவமைத்திருக்கும் இந்த முயற்சி இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

Chef Damu Tribute

செஃப் தாமுக்கு அஞ்சலி

தாமுவின் இழப்பால் சோகத்தில் இருக்கும் சமையல் கலைஞர்கள் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். அதற்காகவே இப்படி இட்லியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இது குறித்து பேசிய சமையல் கலைஞர், செஃப் தாமு எங்களுக்கு சாதாரணமான ஒரு பிரபலம் கிடையாது. சமையல் துறையில் ஏராளமானோர் இருந்தாலும் அந்த கலையின் மூலமாக சாதனைகள் செய்ய முடியும், தேசிய அளவில் அங்கீகாரம் பெற முடியும் என்பதை எங்களுக்கு காட்டியவர் இவர் தான். அவருக்கு மிகவும் பிடித்த இட்லியை வைத்து நாங்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இறுதி சடங்கில் அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தேவாவின் பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தி இருந்தனர். அதேபோல இப்போது தாமுக்கு சமையல் மூலமாகவே அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். நேற்று அவர் காலமான செய்தி வெளியானதிலிருந்தே பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். நெருங்கி பழகிய பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதுபோல தாமுவின் பேட்டிகள் கூட வைரல் ஆகி வருகிறது.

செஃப் தாமுவின் பேட்டிகள்

அதில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, தான் சென்னைக்கு வந்த சமயத்தில் யாரையும் தெரியாததால் ரோட்டோரத்தில் சில நாட்கள் தங்கி, அங்கேயே குளித்து வாய்ப்பு தேடி அலைந்தேன். பல நாள் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருந்தேன் என்று பேசியிருக்கிறார். அதிகமான நேரம் நின்று கொண்டு சமையல் செய்ததால் தான் என் கால்களுக்கு பல பிரச்சனை வந்துவிட்டது என்று கூறியிருந்தார். அதுபோல இஷ்டப்பட்டதை கஷ்டப்பட்டு உழைத்தால் அந்த கஷ்டம் தெரியாமல் நிம்மதியாக வாழலாம் என்று தத்துவமாகவும் பேசி இருந்தார். சமையல் கலையில் பலருக்கு முன் மாதிரியாக இருந்த தாமுவின் இழப்பிலிருந்து இன்னும் பலரால் மீள முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+