சின்னத்திரை நயன்தாராவின் அடுத்த புது அவதாரமா?? நிஷாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்மஸ் வருவதற்கு முன்பே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டாரா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டார்களாம்.

ஒரு காமெடி நடிகரால் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும் என்பதை இப்போதும் நிரூபித்திருக்கிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

அறந்தாங்கி நிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும்... டாக்டர் பட பாடலுக்கு இவர் போட்டுள்ள வீடியோவை பார்த்து..! யாரும் டாக்டரிடம் செல்லாமல் இருந்தால்... சரிதான்..! என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

சூப்பர் டாடி ஷோ

சூப்பர் டாடி ஷோ

வருகிற ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'சூப்பர் டாடி' ஷோவுக்காக கிறிஸ்மஸ் தாத்தா போன்ற கெட்டப்பில் பங்கு பெற்றுள்ள அறந்தாங்கி நிஷா, அதே கெட்டப்பில் டாக்டர் பட பாடலுக்கு படத்தில் வருவது போன்றே.. ஸ்டெப் பை போட்டு ரீல்ஸ் வீடியோ போட்டுள்ளார் . எதை செய்தாலும் அதை நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் கொண்டு செல்ல வேண்டுமென்று மெனக்கெடுபவர் அறந்தாங்கி நிஷா. அதே பாணியில் கிறிஸ்மஸ் பாட்டி கெட்டப்பில் இவர் போட்டுள்ள இந்த வீடியோவை குழந்தைகள் பெரும்பாலும் லைக் செய்வார்கள் என்று நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டிமன்றப் பேச்சாளர்

பட்டிமன்றப் பேச்சாளர்

நல்ல பேச்சாளரான நிஷா பட்டிமன்றங்கள் மூலம் தான் முதலில் அறியப்பட்டார். அப்பொழுதே அவருடைய காமெடியான பேச்சுக்கள், அனைவராலும் ரசிக்கப்பட்டது.பின்பு சேனல்களில் வரும் காமெடி ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் பங்கெடுத்து தனது வெகுளித்தனமான அணுகுமுறையாலும், காமெடி பேச்சாலும், பெரும்பாலானோரால் ரசிக்கப்படும் செலிபிரிட்டியாக பிரபலமடைந்தார். இந்த பிரபலத்தின் காரணமாக பிக்பாஸ் போட்டியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்றார்.

தனக்குத் தானே வைத்த பட்டப்பெயர்

தனக்குத் தானே வைத்த பட்டப்பெயர்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் அன்புக் கேங்கில் இணைந்து இவர் செயல்பட்டதால், கொஞ்சம் நெகட்டிவ் இமேஜை சம்பாதித்துக் கொண்டார். பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைதளங்களை தீவிரமாக பின்பற்றி வரும் இவர், அவ்வப்பொழுது இவர் மற்றும் இவருடைய குழந்தையை வைத்து ரீல்ஸ் வீடியோக்களை போஸ்ட் செய்து வருகிறார். 'சின்னத்திரை நயன்தாரா' என்று இவரே.. இவரை.. கூறிக்கொள்வது, நயன்தாரா ரசிகர்களுக்கு மட்டுமின்றி நெட்டிசன் களுக்கும் கொஞ்சம் வெறுப்பு ஏற்றினாலும், இவரது வெள்ளந்தியான குணத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இவரது வீடியோக்களுக்கு வரவேற்பு கொடுத்து லைக்குகளையும் நல்ல கமெண்டுகளை வழங்கி வருகின்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+