இதுக்கு மேலயுமா ?? அழகு வேண்டும்..ரச்சிதாவை பார்த்ததும் நச்சரிக்கும் ரசிகர்கள்
சென்னை: மணப்பெண் கெட்டப்பில் ரச்சிதாவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
ஜொலிக்கும் நகை அழகா?? சிரிக்கும் சிரிப்பழகா?? என்று ரசிகர்கள் பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டார்கள்.
எளிமையாய் அழகாய் ஜொலிக்கும் ரச்சிதாவை பார்த்ததும் லைக் பட்டன் தெறித்து வருகிறது.

மெருகேறிய அழகு
சாதாரண காட்டன் புடவையும், தாவணியை மட்டுமே காஸ்டியூமாக வைத்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களை தன் அழகால் கவர்ந்து வைத்திருந்த ரச்சிதா.. கன்னட சினிமாவிற்கு போனவுடன் பெரியதிரை என்பதாலோ..! என்னவோ..!? வேற லெவலில் மெருகேறி புதுப்பொலிவுடன் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரை மீனாட்சி
ரச்சிதா என்ற அவருடைய ஒரிஜினல் பெயரை மறந்து 'மீனாட்சி' என்று அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு.. 'சரவணன் மீனாட்சி' சீரியல் மீனாட்சி கேரக்டர் மூலம் மிகவும் பிரபலமானார்.தமிழ் ரசிகர்களே 'இருந்தால்..தங்களுக்கும் இந்த மாதிரி.. மாமா பொண்ணு தான் இருக்க வேண்டும்..! என்று ஏங்கும் அளவிற்கு தன் அழகாலும் நடிப்பாலும் பல இளைஞர்களை புலம்ப வைத்திருந்தார். தற்பொழுதும் தமிழ் சின்னத்திரையும் முக்கியமான கதை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களில் அறிமுகம்
சின்னத்திரை நாயகிகளின் ஒவ்வொருவரின் லட்சியமான வெள்ளித்திரை கனவானது இவருக்கு தன் சொந்த மாநிலமான கர்நாடகாவில் கிடைத்துள்ளது. இதற்காக தன் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியலை விட்டு விலகி.. தனது முழு கவனத்தையும் தற்பொழுது கன்னட சினிமா பக்கமே திருப்பியுள்ளார். அவ்வப்போது அந்த சினிமா சூட்டிங் போட்டோக்கள்,வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்பொழுதும் அப்படித்தான் ஷூட்டிங்கிற்கு ரெடியாகி கொண்டிருக்கும் மேக்கப் வீடியோ வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரே அப்லோட் செய்துள்ளார்.

அசத்தும் மகாராணி கெட்டப்
சாதாரண சேலை, தாவணியில் சிம்பிள் பியூட்டி ஆக இவரைப் பார்த்துப் பழகிய ரசிகர்கள், பார்த்தவுடன் வாயை பிளக்கும் அளவிற்கு ஆடை, அணிகலன்கள் உடன் உள்ள இவரது வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "இதுக்கு..மேலயுமா.. அழகு வேண்டும்!!!.." என்று கமெண்ட் பாக்ஸ்களில் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். இவர் அறிமுகமாகும் சினிமா ஒருவேளை சரித்திரம் சார்ந்த படமாக இருக்குமோ? என்னவோ!!?ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியாகும் போட்டோக்கள் வீடியோக்களில் இவர் பெரும்பாலும் மகாராணி போன்ற கெட்டப்பிலே இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications