சின்னத்திரை சிம்பு ஆகிவிட்டாரா ஆஜித்??.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: கேஷுவலாக ஆட்டம் போட்ட அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.
இவர் எப்போது சினிமாக்களில் கதாநாயகனாக மாறுவார் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கலக்கல் கேப்ஷன்
சின்னத்திரை சிம்புவாகி விட்டாரா..!!? ஆஜித் என்று நெட்டிசன்கள் வியக்கும் அளவிற்கு.., போகிற போக்கில் அசால்டாக..! ஸ்டாப் போட்டு மிரள..! விட்டுள்ளார். பெர்பெக்ட்டா..ஆடனும்...ஆடல.., லொகேஷன் நல்லா இருந்ததால.., சும்மா டிரையல் பார்த்தேன்.. என்று இவர் கேப்ஷன் வேற போட்டிருப்பதை பார்த்தால், இந்தப் பையன் கிட்ட இதை விட பெருசா எண்ணமோ இருக்கு...!!? என்று கேள்விக்குறியுடன் பாராட்டுகளை வாழ்த்துக்களையும் கமென்ட் பாக்சில் கூறிவருகின்றனர்.

சிறுவயதிலே பாடகர்
சிறுவயதிலேயே இனிமையாகப் பாடும் திறமை பெற்றிருந்த ஆஜித், 2011ஆம் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான 'ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3' இல் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் வின் பண்ணியிருந்தார். அதன்பின் சில ஆல்பங்களும் பாடியிருந்தார். அப்போது விஜய் டிவியின் வேறு சில நிகழ்ச்சிகள் வந்து பாடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். விஜய் டிவி உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் 'பிக் பாஸ் சீசன் 4'ல் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் ஆஜித்திற்கும்- கேபிக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதாக ரசிக்கப்பட்டது. பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணவில்லை என்றாலும், எந்தவித நெகட்டிவ் இமேஜும் இல்லாமல் ஆஜித் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
பிக்பாஸ்க்கு பிறகு ஆஜித்- கேபி ஜோடி விஜய் டிவியின் மற்றொரு ரியாலிட்டி ஷோவான 'பிபி ஜோடிகள்' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு டான்ஸ் பர்பாமன்ஸ் செய்தது... வேற லெவலில் இருந்தது...!! என்னதான் செலிபிரட்டிகள் தங்களது திறமைகளை சின்னத்திரை, வெள்ளித்திரை என காட்டினாலும்.., தங்களுடைய மிச்ச மீதி திறமையை காட்டுவதற்கு சமூக வலைதளங்களை தான் தற்போது ஊடகமாக பயன்படுத்துகின்றனர். அதன் மூலமும் பல்வேறு வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். அப்படித்தான் ஆஜித்தும் தற்பொழுது தனக்கிருக்கும் டான்ஸ் திறமை தனித்து தெரியும் வண்ணம் போட்டுள்ள வீடியோ அஜித்தின் டெடிகேஷன் லெவலை காட்டுவதாக உள்ளது.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
ஏற்கனவே சூப்பர் சிங்கர் டைட்டில் வின் பண்ணி தான் ஒரு நல்ல பாடகர் என்று நிரூபித்து விட்ட ஆஜித், பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் கேமரா முன்பும் பெர்பாமன்ஸ் செய்ய பழகி விட்டார். தற்பொழுது இந்த டான்ஸ் ரீல்ஸ் வீடியோவும் சேர்ந்து,நடிகர் சிம்புவை போன்று சிறுவயதிலேயே சினிமாவிற்கு தேவையான அத்தனை தகுதியும் ஆஜித்திற்கும் இருக்கிறது என்று இவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான நபர்கள் கூட வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications