பிக் பாஸ் பாவனியை அமீர் பிரிந்து விட்டாரா? அவரே வெளியிட்ட பதிவு.. இவங்க காதலும் இப்படியா?
சென்னை: நடிகை பாவனி ரெட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்து கொண்டிருக்கையில் அமீர் குறித்தும் திடீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் மற்றும் பாவனி இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது பாவனி தான் சிங்கிள் என்று கூறி இருக்கிறார்.

அதோடு அமீரிடம் கேள்வி கேட்பது போன்றும் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகை பாவனி ரெட்டிக்கு அறிமுகம் பெரிய அளவில் தேவை இல்லை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்திருந்தார். அதை தொடர்ந்து சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி பல இளைஞர்களையும் தன்னுடைய ரசிகர்களாக மாற்றி இருந்தார்.

இந்த நிலையில் தான் பாவனிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய காதல் கணவர் இறப்பு பற்றி கூறி அந்த திருமணத்திற்கு பிறகு தான் பெற்ற வேதனைகளையும் தன்னுடைய நிலைமையையும் கூறி பலருடைய அனுதாபத்தை பெற்று விட்டார்.
அதைத்தொடர்ந்து சில நாட்களில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் பாவனியிடம் அதிகமாக நெருக்கமாக பழகி வந்தார். அத்தோடு தான் காதலிப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே கூறியிருந்தார். ஆனால் பாவனி அமீரை தம்பி என்று கூறி கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் வெற்றி பெற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து பாவனி தன்னுடைய காதலை அமீரிடம் கூறியிருந்தார். அதற்குப் பிறகு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர். அதில் அதே நேரத்தில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பாவனி பதிலளித்திருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் பாவனியிடம் நீங்கள் கமிட்டடா என்று கேட்க? இல்லை நான் சிங்கிள் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
அதுபோல இன்னொரு ரசிகர் நீங்கள் அமீரை காதலிக்கிறீர்களா? என்று கேட்க, அதற்கு அப்படியா அமீர் என்று அமீரை தயார் செய்து பாவனி கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படியாக சில ஸ்டோரிகளை பாவனி பகிர்ந்து இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications