திருமணம் பற்றி திடீர் அறிவிப்பு வெளியிட்ட அமீர்.. காரணம் அந்த விஜய் டிவி பிரபலம் தானாம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அந்த சீசனில் அவரோடு போட்டியாளராக இருந்த பாவனியை காதலித்து வந்த நிலையில் தங்களுடைய திருமண எப்போது என்பது பற்றி இப்போது வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். அதுபோல தான் பாவனியை திருமணம் செய்வதற்கு முக்கிய காரணமே விஜய் டிவி பிரியங்கா தான் என்றும் அமீர் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமான டான்ஸ் மாஸ்டர் அமீர் விஜய் டிவியில் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி இருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்தார். இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சிலர் புகழில் உச்சத்துக்கு போயிருக்கின்றனர். ஒரு சில அதுவரைக்கும் சம்பாதித்து வைத்திருந்த பெயரையும் புகழையும் கூட இழந்து இருக்கின்றனர். ஆனால் அமீர் அதுவரைக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்காக உள்ளே நுழைந்து யார் இந்த பையன் என்று பலரையும் தேடி பார்க்க வைத்திருந்தார்.
அதிலும் சோக கதை சொல்லும் டாஸ்க்கில் அமீர் பலருடைய மனதை தொட்டுவிட்டார். அவருடைய அம்மாவின் இறப்பு அதற்குப் பிறகு அவர் பட்ட கஷ்டங்கள் அந்த நேரத்தில் அவருக்கு உதவிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளரான ஐசுவின் குடும்பத்தினர் பற்றியும் உருக்கமாக அமீர் பேசி இருந்தார். அதேபோல அந்த சீசனில் சின்னத்திரை நடிகையான பாவனி ரெட்டியும் கலந்து கொண்டிருந்தார்.
பாவனியும் சோக கதை சொல்லும் டாஸ்க்கில் அவருடைய காதல் கணவரின் இறப்பு, அதற்குப் பிறகு தான் பட்ட வேதனை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே அமீர் தான் பாவனியை காதலிப்பதாக பல இடங்களில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போது பாவனி அமீரின் காதலுக்கு ஓகே சொல்லாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிறகு அந்த சீசனில் டைட்டில் வெற்றியும் பெற்றிருந்தனர். அப்போது தன்னுடைய காதலை இணையதளத்தில் அமீருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சொல்லி இருந்தார். இந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தான் இப்போது வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் ரசிகர்கள் இவர்களிடம் எப்போது திருமணம் என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தொகுப்பாளராகி 15 வருடங்கள் நிறைவு செய்திருக்கும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் அவர் பற்றிய பல நினைவுகளை பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் பிரியங்கா பற்றி பேசியிருந்தனர். அதில் அமீர் நானும் பாவனியும் காதலிப்பதற்கு முக்கிய காரணமே பிரியங்கா தான்.
அதுபோல பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது போல கான்செப்ட் எடுக்கப்பட்ட போது கூட எனக்கு இரண்டு முறை மேடையில் பிரியங்கா தான் தாலி எடுத்துக் கொடுத்தார். அது அந்த நிகழ்ச்சிக்காக மட்டும் அல்லாமல் என்னுடைய மனதில் இருந்தும் செண்டிமெண்டாக பிரியங்கா எடுத்து தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. அது போல என்னுடைய திருமணத்தில் கூட பிரியங்கா தான் எனக்கு தாலி எடுத்து தருவார். அதுபோல இந்த வருடத்திற்குள் எங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று அந்த பேட்டியில் அமீர் பேசி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications