மணிமேகலைக்கு சப்போர்ட் பண்றவங்க முட்டாள்! எல்லாமே ஸ்கிரிப்ட்.. அந்த வீடியோ.. அமீர் சொன்ன பகீர்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது குறித்து அவர் வெளியிட்ட பதிவுக்கு பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக பல விஜய் டிவி பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான அமீர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் கருத்துக்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த அத்தனை பிரச்சனைகளையும் மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை தவிடு பொடி ஆகிவிட்டது. இதுவரைக்கும் கடந்த வாரத்தில் ஹேமா கமிட்டி பிரச்சினை அதிகமாக பேசப்பட்டது, அதை தொடர்ந்து ஜெயம் ரவியின் டைவர்ஸ் விசயமும் பேசப்பட்டது. இதை எல்லாம் மணிமேகலை வெளியிட்ட ஒரே ஒரு பதிவு தூள் தூளாக்கி விட்டது.

மணிமேகலை கடந்த வாரத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் அதற்குக் காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான். அவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். எனக்கு சுய கௌரவம் தன்மானமும் முக்கியம் அதனால் வந்துவிட்டேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிமேகலைக்கு ஆதரவாக ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி பிரியங்காவை வசைப்பாடி வருகிறார்கள்.
4 நாட்களாக பொறுத்து பார்த்த விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக இப்போது வீடியோக்களும் பேட்டிகளும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவின் நண்பரான அமீர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் பிரியங்காவிற்கு ஆதரவாக பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பிரியங்கா டாமினேஷன் செய்கிற ஆளே கிடையாது.
நான் போட்டியாளராக போன நிகழ்ச்சியில் கூட பிரியங்கா ஜட்ஜ் ஆக இருந்தார். அதற்குப் பிறகு பிரியங்காவை நாங்கள் பலர் கிண்டல் செய்த போது கூட பிரியங்கா அதை ஸ்போட்டிவாக தான் எடுத்துக் கொள்வாரே தவிர எந்த இடத்திலும் நான் உங்களுக்கு ஜட்ஜ் ஆக இருந்தேன் என்னை நீங்கள் எப்படி இப்படி கிண்டல் செய்யலாம் என்று கேட்டது கிடையாது.

பிரியங்கா எல்லா தொகுப்பாளர்களுடன் சேர்ந்து தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். எல்லாரிடமும் அவரை தாழ்த்தி தான் மற்றவர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் மணிமேகலை வெளியிட்ட ஒரே ஒரு பதிவை நம்பி ரசிகர்கள் பிரியங்காவை திட்டி வருகிறார்கள். அவர்களை முட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஃபேக்கான ஆடியோ ஒன்று வெளியானது. அதில் பிரியங்காவும் மணிமேகலையும் சண்டை போடுவது போல எடிட் செய்து பரப்பி வருகிறார்கள். அதையும் உண்மை என்று நம்பி பிரியங்காவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு பிரியங்கா தாமரையோடு சண்டை போட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு ஒரு இடத்தில் பிரியங்கா இது நீங்க தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் இல்ல இது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று பேசி இருப்பார். அதையும் இணையத்தில் பகிர்ந்து பிரியங்காவை திட்டி வருகிறார்கள். அது ஸ்கிரிப்டட் என்பது ரசிகர்களுக்கு தெரியாதா? இது கூட தெரியாமல் எப்படி அடுத்தவர்களின் மனதையும் அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையும் பற்றி பேச தோன்றுகிறது என்று எனக்கு புரியவில்லை என்று அந்த பேட்டியில் அமீர் காட்டமாக பேசியிருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications