காசு, பணம் முக்கியம் இல்லை.. ரூ.125 கோடி உதறி தள்ளிய அமீர் கான்.. இதுக்கு உண்மையா தைரியம் வேண்டும்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான அமீர் கான் சமீபத்தில் ரூ.125 கோடி மதிப்பிலான ஒரு டீலை உதறித் தள்ளி இருக்கிறார். சினிமாவின் எதிர்காலத்திற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார். எதற்காக அமீர் கான் இந்த முடிவை எடுத்தார்.. இதன் காரணம் என்ன.. பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
பாலிவுட்டில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர் அமீர் கான். இவரது படங்கள் எப்போதும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலேயே இருக்கும். இவரது நடிப்பில் கடந்த ஜூன் 20ம் தேதி 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படம் வெளியானது.. விமர்சகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்ற இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது.

அமீர் கான்
இந்த காலத்தில் ஒரு படம் தியேட்டரில் ஓடுவதற்கு இணையாக, சில நேரம் அதை விட அதிகமாகக் கூட ஓடிடி தளங்களில் விற்பனையாகும். அப்படி தான் 'சிதாரே ஜமீன் பர்' படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்க அமீர் கானை பட வெளியீட்டிற்கு முன்பே பிரபல ஓடிடி நிறுவனம் அணுகியுள்ளது. அவர்கள் ரூ.125 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனாலும், அமீர் கான் அதை நிராகரித்திருக்கிறார்.
ரூ.125 கோடி என்பது பெரிய தொகை.. அதை நிராகரிக்க வேண்டாம் என அமீர் கானுக்கு நெருக்கமான அனைவரும் சொல்லியுள்ளனர். ஆனாலும், அந்த ஆலோசனைகளைக் கேட்காமல் 'சிதாரே ஜமீன் பர்' ஓடிடி உரிமத்தை விற்க மறுத்துவிட்டார். வருமானத்தை விட, படத்தின் மீது மக்கள் வைக்கும் மதிப்பீடுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார்.
என்ன காரணம்
இது தொடர்பாக பிஸினஸ் டுடே-க்கு அளித்த பேட்டியில் அமீர் கான், "வெளியீட்டிற்கு முன் ஓடிடிக்கு நாங்கள் விற்கவில்லை. அது ஒரு கடினமான மற்றும் பெரிய முடிவு. இதனால் எங்களுக்கு எந்த பாதுகாப்பு வலையும் இல்லை. ஆனாலும், ஒரு படத்தின் இறுதித் தீர்ப்பை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாக ஓடிடி வேண்டாம் என்றோம்.
மக்கள் ஒரு படத்தை விரும்பும்போது, அது வாய்மொழி விளம்பரம் மூலம் வெற்றிபெறும். படம் வெளியான பிறகு, மக்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது எனக்கு முக்கியம். 'சிதாரே ஜமீன் பர்' படத்தை தியேட்டரில் பார்த்த பார்வையாளர்கள் அதை மிகவும் விரும்பியுள்ளனர். படம் உலகளவில் ₹250 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றது" என்றார்.
ரூ.125 கோடி டீல்
₹125 கோடி ஒப்பந்தம் குறித்துப் பேசிய அவர், "அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டாம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால் நீண்ட கால நோக்கில், ஓடிடி என்பது ஒரு படைப்பாளியாகவோ அல்லது பிஸ்னஸ்மேனாக எனக்குச் சிறந்ததல்ல என்று நான் உறுதியாக நம்பினேன். ஓடிடி தளங்களில் இருந்து ₹125 கோடியைப் பெறுவதை விட, எனது ரசிகர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ₹100 பெறுவதையே விரும்புகிறேன். அந்த 100 ரூபாய்க்குத் தான் மதிப்பு அதிகம்" என்றார்.
அதேநேரம் தான் முழுமையாக ஓடிடிக்கு எதிரானவன் இல்லை என்றும் கூறியிருக்கிறார் அமீர் கான். திறமையான இளம் மற்றும் சுதந்திரமான திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். தியேட்டர் ரிலீஸுக்கு போராடுவோருக்கு, ஓடிடி ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிதாரே ஜமீன் பர் ஓடிடி
2018ல் ஸ்பானிஷ் படமான 'கேம்பியோனஸ்' படத்தின் ரிமேக் தான் 'சிதாரே ஜமீன் பர்'. கடந்த ஜூன் 20ம் தேதி இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் இப்போது ஓடிடியில் வெளியாகவில்லை. மாறாக நேரடியாக யூடியூப் தளத்தில் கட்டண முறையில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது யூடியூப் தளத்தில் ரூ.100 செலுத்தினால் மட்டுமே உங்களால் இந்த படத்தைப் பார்க்க முடியும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications