எங்க வீட்டில் விசேஷம்.. கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த அருண் விஜய் மனைவி.. குடும்பமே வாழ்த்துது
சென்னை: நடிகை அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி அருண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அருண் உடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று அந்த வீடியோவில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு கொடுக்கும் அன்பு மற்றும் பாசத்தையும் அதில் ஆர்த்தி பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் பிரபலங்களாக இருக்கின்றனர். அதிலும் நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் அவருடைய குடும்பத்தை சார்ந்த அனைவருமே நடிகர்களாக இருக்கின்றனர். விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். ஆனால் இப்போது வரைக்கும் தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மகன் மற்றும் மகள்களும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். அப்போது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துக்கண்ணுவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
ஆனால் விஜயகுமார் உடைய இரண்டு மனைவிகளும் ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர். அவருடைய குழந்தைகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால் மஞ்சுளா இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் வனிதா அவருடைய குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தார். இப்போது வரைக்கும் வனிதா மட்டும் இந்த குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகிறார். விஜயகுமாரின் மகள், மகன்களில் இரண்டாவது மகள் அனிதா மட்டும் சினிமாவில் அறிமுகமாகவில்லை.
அவருக்கும் அந்த நேரத்தில் சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு வந்தது. அவரை எப்படியாவது சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாரதிராஜா முடிவு செய்திருந்தார். ஆனாலும் அதற்கு அனிதாவும் அவருடைய அம்மாவும் சம்மதிக்கவில்லை. அனிதா எப்படியாவது டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவரை டாக்டருக்கு படிக்க வைத்து இருக்கின்றனர். பிறகு படிப்பை முடித்துவிட்டு லண்டனில் இத்தனை வருடங்களாக டாக்டராக பணியாற்றி இருந்தார். கடந்த வருடத்தில் தான் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு சொந்த ஊருக்கு வந்து இருக்கிறார்.
அதுபோல அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு அவருடைய குடும்பத்தினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஆர்த்தி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில் என்னை சுற்றி எல்லா நன்மைகளும் அன்பும் இருப்பது எனக்கு பெரும் பாக்கியம்.
இந்த பிறந்தநாள் முற்றிலும் ஆச்சரியமான சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அது என்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக இப்போது மாறி இருக்கிறது. இத்தனைக்கும் காரணம் என்னுடைய அண்ணி, அனிதா தான். என்னை மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ஆக உணர வைத்தார். என் குடும்பத்தினர் அனைவரும் இந்த நாள் முழுவதும் எனக்கு நல்ல விஷயங்கள் சொல்வதை நிறுத்தவில்லை. அதுபோல எனக்கு இதுவரைக்கும் துணையாகவும் எப்போதும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் என்னுடைய கணவர் அருண் விஜய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
என்னுடைய (அம்மா மற்றும் மாமியார் இரண்டு) அம்மாக்களும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். அதுபோல என்னுடைய நண்பர்களும் எனக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் மகிழ்ச்சியான உலகம். நேரில் வந்து அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன். வர முடியாத என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை மிஸ் பண்ணுகிறேன், மீண்டும் எல்லாரும் சேர்ந்து கொண்டாடலாம் என்று அந்த பதிவில் அருண் விஜய் மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications