புற்றுநோய் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகரின் தற்போதைய நிலை.. உருக்கமாக பேசிய மகள்
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ICU-வில் இருப்பதாக அவருடைய மகள் அபிநயா சில மாதங்களுக்கு முன்பு போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவருடைய நிலைமை என்ன என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நடிகர் நேத்திரன் பல வருடங்களாகவே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களிலும் அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி தீபா நேத்திரனும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழிலும் மாரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணவனை போலவே தீபா நேத்திரனும் பல வருடங்களாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் முன்னணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல நேத்திரன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலிலும் நடித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனாக நடித்திருக்கிறார். நேத்ரன் மற்றும் தீபா நேத்ரன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் அபிநயா நேத்திரனுடன் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு அபிநயா பெரிய அளவில் பிரபலமானார். அதுபோல சமீபத்தில் முடிவடைந்த கனா காணும் காலங்கள் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் அபிநயா நடித்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தை ஐசியூவில் இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய அப்பாவிற்கு கேன்சர் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது. அவருக்கு இப்போது ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் அவர் ஐசிவில் இருக்கிறார். சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக இருக்கிறது.

இதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதா வேண்டாமா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது. என்னுடைய சிந்தனையை புறம் தள்ளிவிட்டு இன்ஸ்டாவில் பதிவிடுகிறேன். என்னுடைய தந்தை குணமாவதற்கு எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள்.. உங்களுடைய வேண்டுதலுக்காகவே நான் இதை பதிவிடுகிறேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியானதும் பலரும் அபிநயா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வந்தனர்.

ஒரு சிலர் இந்த நேரத்தில் கூட வீடியோ வெளியிடுறீங்களே என்று விமர்சித்தும் வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுக்காக ஆறுதல் கூறியவர்களின் அன்பை மற்றும் தாங்கள் புரிந்து கொண்டதாக அந்த நேரத்தில் அபிநயா போஸ்ட் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் தன்னுடைய தந்தையை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அப்போது அபிநயா பேசுகையில் நான் என்னுடைய அப்பா ஐசியுவில் இருக்கிறார் புற்றுநோய் பாதித்திருக்கிறது என்று போஸ்ட் போட்டதும் சிலர் விமர்சித்தார்கள் அது எனக்கு மன வேதனையை கொடுத்தது. ஆனால் என்னுடைய அப்பா மீண்டு வந்து விட்டார். இப்போது அவர் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு மாறி கொண்டு இருக்கிறார். எனக்கு முக்கிய துணையாக இருப்பது என்னுடைய அப்பா தான். எந்த பிரச்சனை வந்தாலும் எங்களுக்காக தைரியம் கொடுப்பார்.

அவருக்கு புற்றுநோய் என்ற ரிசல்ட் வந்ததும் நாங்கள் எல்லாம் உடைந்து போய்விட்டோம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாம் மாறும் என்று தைரியம் கொடுத்தார். அப்பா இன்னும் சீக்கிரமாக பழைய நிலைக்கு முழுமையாக திரும்பியதும் லைவில் பேசுவார். அதுபோல சமூக வலைதளத்தில் சில கமெண்ட்கள் நம்மை கஷ்டப்படுத்துற வகையிலே போடுறாங்க.
எங்களுடைய போஸ்ட் ஏதாவது பார்த்த ரசிகர்கள் சிலர் நேத்திரனின் மூத்த மகள் ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுறாங்க. இரண்டாவது மகள் தான் அமைதியாக இருக்காங்க என்றெல்லாம் சொல்லுவாங்க. ஆனால் பழகி பார்த்தால் தானே ஒருத்தவங்களுடைய உண்மையான கேரக்டர் தெரியும். ஆனால் பார்க்காமலேயே புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு இவர்கள் எதற்காக இப்படி எல்லாம் சொல்றாங்கன்னு தோணும். ஆரம்பத்தில் நான் ரொம்ப ஒல்லியாக இருப்பேன் என்று அதற்காக பாடி ஷேமிங் பண்ணி இருக்கிறாங்க என்று என்று அந்தப் பேட்டியில் எமோஷனலாக அபிநயா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications