ஐயோ பாவம்.. பரிதாபமாக இறந்து கிடந்த துணை நடிகர் “மோகன்”.. அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தவர்
மதுரை: நடிகர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த மோகன் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்தார்.
இவர் நான் கடவுள், அதிசய மனிதர்கள் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
யாருடைய உதவியையும் இல்லாததால் திருப்பரங்குன்றம் பகுதியில் தனியாகவே வசித்து வந்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சின்னு. இவருடைய மகன் மோகன் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். அதுவும் அதுவும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடிகர் கமல் அதாவது அப்புவின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்கு பிறகு சில வருடங்களாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார். அதற்கு பிறகு நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் மற்றும் அதிசய மனிதர்கள் உட்பட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிறகு மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறார். அங்கே வறுமையின் காரணமாக பெரிய ரத வீதியில் அவர் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அதாவது ஜூலை 31 பெரிய ரத வீதியில் மோகன் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்து இருக்கிறார். இது பற்றி அங்கிருந்தவர்கள் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் மோகனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

பிறகு இந்த தகவல் மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications