மூன்று தவறுகளில் விழுந்த அப்பாஸ்.. பாத்ரூம் பிரஷ்ஷையும் விடல.. பெட்ரோல் பங்க் டூ வெப்சீரிஸ்: பிரபலம்
சென்னை: பிரபல நடிகர் அப்பாஸ், குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும், பெட்ரோல் பங்கிலும், மெக்கானிக் ஷெட்டிலும், கன்ஸ்ட்ரக்ஷன் வேலையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அப்பாஸ் மீண்டும் ரீஎன்ட்ரி தரப்போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. இதுகுறித்த மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "அப்பாஸை பொறுத்தவரை நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகர்.. காதல் தேசம் படத்துக்கு பிறகு, 3 தவறுகளை அவர் செய்துள்ளார்.. பெரிய குற்றமெல்லாம் கிடையாது.. சினிமா உலகில் தங்களுக்கே தெரியாமல் நடக்கும் தவறுகள்தான் இவையெல்லாம்.

3 தவறுகள் இதுதான்
முதலாவதாக, படையப்பா படத்தில், ரஜினியின் மருமகன் கேரக்டருக்கு விஜய் முதல் பல நடிகர்களை அப்ரோச் செய்தார்கள்.. ஆனால், வெயிட் இல்லாத ரோலாக இருப்பதாக நினைத்து, யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. டம்மி ரோல் என்பதால் விஜய்யும் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த கேரக்டரில் நடிக்க அப்பாஸ் ஒப்புக் கொண்டார்.. 2தாக, நெகட்டிவ் கேரக்டர் என்று தெரிந்தும் திருட்டுப் பயலே படத்தில் நடித்திருந்தார்.. அந்த வில்லன் வாய்ப்பை அப்பாஸ் அவாய்டு செய்திருக்கலாம்.
3வதாக, ஹார்பிக் விளம்பரத்தில் நடித்ததுதான்.. அனைவருக்குமே இது ஆச்சரியத்தை தந்தது.. இளம்பெண்கள் உட்பட அனைவருமே அப்பாஸின் ரசிகர்களாக உள்ளபோது, இவர் ஏன் இந்த விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. வெறும் ஹார்பிக் டப்பாவை காட்டி விளம்பரம் செய்திருந்தாலும் பரவியில்லை, பிரஷ்ஷை கொண்டுபோய் கழுவி சுத்தம் செய்திருந்தார்.. கடைசியில் சினிமா துறையிலிருந்தே பொட்டலம் கட்டி அனுப்பிட்டாங்க..
ரஜினிகாந்த் விளம்பரம்
இந்த விளம்பரம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், ஹீரோவுக்கென்று ஒரு இமேஜ் உள்ளது. ரஜினிகாந்த் இன்றுவரை ஒரு விளம்பரத்திலாவது நடித்திருக்கிறாரா? அரசு விளம்பரததில்கூட கமல் நடித்திருப்பார்.. ஆனால், ரஜினி நடித்ததில்லை.. ரஜினி மட்டும் விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால், நாளைக்கே பல விளம்பரங்கள் அவருக்காக வரிசைகட்டும்.
எனவே, விளம்பரங்களில் நடிப்பதுடன், அது எந்த மாதிரியான விளம்பரங்களில நடிக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது அப்பாஸை பெரிதும் பாதிப்படைய வைத்துவிட்டது.
வில்லன் நடிகர்கள்
இனிமேல் வெப்சீரிஸில் அப்பாஸ் நடிப்பதாக இருந்தாலும், நல்ல கேரக்டரை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். வில்லனாக நடித்தால் காணாமல் போய்விடுவார்கள்., திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தில் நடித்த நடிகர் ஜீவன் ஒரு நல்ல நடிகர்தான், ஆனால் அவரும் ஃபீல்டு அவுட் ஆகிவிட்டார்..
வில்லனாக நடித்து புகழ்பெறுபவர் சத்யராஜ் போல ஒருசிலரே.. எனவே, அப்பாஸ் வில்லனாகவே நடித்தாலும், அது வெயிட் கேரக்டர் உள்ள வில்லனாக இருக்க வேண்டும். அப்பாஸ் மீண்டும் நடிக்க வருவது மகிழ்ச்சி.. நல்லபடியாக வரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பங்க் பணி
சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டி தந்திருந்தபோது அப்பாஸ் பற்றி பேசியிருந்தார்.. அதில், "ஹார்பிக் போன்ற டிவி விளம்பரங்களில் அப்பாஸ் நடித்தார்..
அப்பாஸ் ஏன் பாத்ரூம் விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள்.. காலம் வர வர எல்லாமே மாறும்.. இப்போது அப்பாஸ் வெளிநாட்டில், பெட்ரோல் பங்க், பைக் மெக்கானிக்காக பணிபுரிவதாக தெரிகிறது. சினிமாவையே நம்பி ஏமாந்து மனம் சோர்ந்து போகாமல், தன் குடும்பத்தை காப்பாற்ற இதுபோன்ற வேலைகளில் இறங்கியிருப்பது நல்ல விஷயம்.. அப்பாஸ் தன்னுடைய குடும்பத்துடன் நன்றாக இருப்பதற்கு வாழ்த்துவோம்" என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications