பிக் பாஸில் நடிகர் அப்பாஸா..? போன் பண்ணி அழைத்த கமல்ஹாசன்.. இதற்கு இப்படி ஒரு காரணமா?
சென்னை: நடிகர் அப்பாஸ் "காதல் தேசம்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வளம் வந்தவர்.
சமீபத்தில் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் அவரிடம் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி பேசி இருந்தாராம்.
அது பற்றி நடிகர் அப்பாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய தற்போதைய நிலை பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் தங்களுக்கு என்று தனி அடையாளங்களையும், வித்தியாசமான கேரக்டர்களையும் ரசிகர்களின் மத்தியில் காட்டியிருந்தனர். அதில் ஒருவர் நடிகர் அப்பாஸ். இவர் சாக்லேட் பாயாக பல ரசிகர்களை கவர்ந்து விட்டார். இப்போதைய காலகட்டத்தில் எத்தனையோ நடிகர்கள் சாக்லேட் பாய் என்று கூறப்பட்டாலும், அதற்கு அடித்தளத்தில் இவருடைய பெயர் தான் இருக்கும்.
சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தில் தங்களுக்கு இணையாக வேறு ஒரு நடிகர் கேரக்டர் இருந்து விடக்கூடாது என்று அப்போதும் இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எதிர்மறையாக தான் அப்பாஸ் இருந்திருக்கிறார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக பல நடிகர்களும் இருப்பார்கள். குறிப்பாக நடிகர் சத்யராஜ், நடிகர் மாதவன், நடிகர் விஜயகாந்த், நடிகர் அஜித்குமார், நடிகர் மம்முட்டி என பல நடிகர்களோடு இவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்.
தன்னுடைய கேரக்டரில் சிறப்பாக இருந்தாலே போதும் தனக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று தன்னுடைய தனித்துவத்தை காட்டி வந்த நடிகர் அப்பாஸ், ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வருடத்தில் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என்று பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மாடலாகவும் இருந்தார்.
இந்த நிலையில் தான் கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ராமானுஜர் என்ற திரைப்படத்திலும் பச்சை கலியன் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். அத்தோடு அந்த காலகட்டத்தில் இரண்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் இவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசுகின்றார். அப்போது தன்னுடன் நடித்த நடிகர்கள் இப்போதும் தன்னிடம் டச்சில் இருக்கிறார்கள். பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். "சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசன் எனக்கு போன் போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாயா? என்று கேட்டார். எனக்கு அது விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்".
காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் எல்லாம் நம்மால் இருக்க முடியாது. நான் எப்போதும் துருதுருவென இருப்பேன். வெளியே சென்று வந்து கொண்டிருப்பேன். ஆனால் அந்த நிகழ்ச்சியில் என்னால் உள்ளே இருக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிற வீடியோ இப்போது பரவி வருகிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் நல்ல முடிவு எடுத்தீர்கள்.
நல்ல வேலை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை. உங்கள் மீது எங்களுக்கு இருக்கும் மரியாதை அந்த நிகழ்ச்சியில் அப்படியே மாறி இருக்கும். பலர் உள்ளே வந்து தங்களுடைய பாசிட்டிவான பெயரைக் கெடுத்து இருக்கிறார்கள். உள்ளே நல்லவர்களாக இருப்பதும் கெட்டவர்களாக இருப்பதும் விஜய் டிவி தீர்மானிப்பதும் தான் என்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications