துள்ளுவதோ இளமை பட நடிகரின் பரிதாப நிலை! அடையாளம் தெரியாமல் மாற்றிய நோய்.. 28 லட்சத்திற்காக தவிப்பு!
சென்னை: இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகர் அபிநய் (அபினய்) கிங்கர், லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது. அபிநய் தன்னுடைய நிலை குறித்து உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் சில வருடங்கள் கழித்து ஆளே அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும்தான் தொடர்ந்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். ஒரு சிலர் முதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று ரசிகர்கள் தேடும் நிலையில்தான் பல நடிகர்களின் நிலைமை இருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் அபிநய்.

இவர் நடிகர் தனுஷ், ஷெரின் உட்பட பலர் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார் முதல் திரைப்படம் அபிநய்க்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ஒரு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
அதற்கு பிறகு 2000 வருஷத்திற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிக்க வந்து தொடங்கியிருந்தார். அதிலும் சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதுபோல துப்பாக்கி, அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் வித்யூக் ஜாம் வால்யூவுக்கு இவர்தான் பின்னணி குரல் வழங்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் உருவாகி இருந்தார். அதுபோல ஓரியோ பிஸ்கட் மற்றும் 3 ரோசஸ் டீ பவுடர்காகவும் இவர் விளம்பரங்களில் நடித்திருந்தார். இதனால் இவர் பலருக்கும் பரீட்சையமாகமான நபர் தான். ஆனால் சில வருடங்களாக இவர் சினிமா மற்றும் விளம்பரங்களில் பெரிதாக காணவில்லை.
இந்த நிலையில் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. அதாவது இத்தனை நாட்களாக இவர் சாக்லேட் பாயாக கலக்கி கொண்டு இருந்தார். பல திரைப்படங்களில் அமெரிக்க மாப்பிள்ளை ஆகவும் செகண்டு ஹீரோவாகவும் நடித்து வந்த இவர் லிவர் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
அபினவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறு உருக்கமாக கேட்டிருக்கிறார். 43 வயதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அபிநய் மாறி இருக்கிறார்.

அதுபோல அவருடைய வயிற்றுப் பகுதி அளவுக்கு அதிகமாக வீங்கி இருக்கிறது. அவருடைய வயிற்றுப் பகுதியில் இருந்து டியூப் மூலமாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோக்களை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications