Abhinay: நடிகர் அபிநய் இறுதி சடங்கு.. உறவினர் யாருமே கூட இல்லை! நடிகர் சங்கம் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய், கல்லீரல் பாதிப்பால் இன்று அதிகாலை காலமானார். சரியான நேரத்தில் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாததால், அவரது இறுதி சடங்கு குறித்து குழப்பம் நீடித்த நிலையில், தற்போதுச் சென்னை ஏவிஎம் மின் மயானத்தில் மாலை 4 மணிக்கு தகனம் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Abhinay Thulluvadho Ilamai Dhanush Kasthoori Raja

அபிநயின் சோக பின்னணி

நடிகர் அபிநய் 2002-ஆம் ஆண்டு தனுஷுடன் இணைந்து நடித்த பிறகு, 'சிங்காரச் சென்னை', 'பொன் மேகலை' போன்ற படங்களில் நாயகனாக நடித்திருந்தார். மேலும், 'துப்பாக்கி' பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கும், 'பையா' போன்ற படங்களில் சில கதாபாத்திரங்களுக்கும் அவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

உடல்நல பாதிப்பு

அபிநய், சிலகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் சிக்கியிருந்தார். இதற்கிடையில் அவருக்குக் கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல்நலமும் குன்றியது. சில மாதங்களுக்கு முன்பு, சிகிச்சைக்குப் பணம் கோரி வீடியோ வெளியிட்டபோது, அவர் "எனக்கு ஒன்றரை வருடம்தான் நேரம் இருக்குன்னு சொன்னாங்க" என்று உருக்கத்துடன் பேசியிருந்தார்.

உதவிக்கரங்கள்

அவரது நிலை அறிந்த நடிகர் தனுஷ் 5 லட்சம் ரூபாயும், நடிகர் KPY பாலா 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறியிருந்தனர். அபிநய் காலமான தகவல் இன்று காலை வெளியான போது, அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளில்ச் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் பேசும்போது, "அபிநய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், அவருடைய இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் சென்னையில் யாரும் இல்லை" என்று தெரிவித்தனர்.

பூர்வீகம்

அவர் பெங்களூரை சார்ந்தவர் என்றும், அவருடைய உறவினர்கள் யார், என்ன என்பது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால், அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு இறுதி சடங்கு ஏற்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

Abhinay Thulluvadho Ilamai Dhanush Kasthoori Raja

மாலை 4 மணிக்கு தகனம்

நடிகர் சங்கம் தலையிட்டதன் பயனாக, அடுத்த சில மணி நேரங்களுக்குள் அவரது உறவினர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அதனால், இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிநயின் உடல், இன்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை ஏவிஎம் மின் மயானத்தில் வைத்துத் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இந்தக் கலைஞனின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பூச்சி முருகன் முன்னின்று நடத்துவதாகவும், அத்துடன் நடிகர் KPY பாலா ஒரு சில நடிகர்கள் கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

வறுமையாலும், நோயாலும் வாடிய ஒரு கலைஞனின் இறுதிப் பயணத்தில், திரையுலகம் அவருக்குத் துணை நிற்பது ஆறுதலை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+