Abhinay: "தம்பின்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக..." நடிகர் அபிநயின் இறுதி சடங்கில் KPY பாலா செய்த செயல்!
சென்னை: 'துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபிநயின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதி சடங்குகள் குறித்துக் குழப்பம் நீடித்தது. உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் KPY பாலா, அபிநயின் இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தையும் தானே பொறுப்பேற்று சொந்த சகோதரனாக நடத்தியிருப்பது, திரையுலகம் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

உருக வைத்த இறுதி பேச்சு
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அபிநய், இன்று அதிகாலை காலமானார். அவரது உறவினர்கள் சென்னையில் இல்லாததால், நடிகர் சங்கம் அபிநயின் இறுதிச் சடங்கு குறித்துக் குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில், ஏற்கனவே அபிநய்க்கு பல உதவிகளை செய்து வந்த KPY பாலா, "தம்பின்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக, அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நானே முழுமையாகப் பார்த்துக் கொள்கிறேன்" என்று முடிவெடுத்தார்.
சொந்த தம்பியாக
ஒரு சில மாதங்களுக்கு முன்பு சவாலான சூழலில் உதவி செய்த போது, அபிநய் KPY பாலாவைத் 'தம்பி' என்று பாசமாக அழைத்ததை, இன்று பாலா உண்மையான உணர்வுடன் நிறைவேற்றியுள்ளார். அபிநயின் மரணச் சடங்குகளைச் சொந்தச் சகோதரனைப் போலப் பாலா எடுத்து நடத்துவது, மனிதநேயத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.
இரவில் நடந்த நெகிழ்ச்சி
அபிநய் - பாலா இடையேயானப் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அபிநய்க்கு KPY பாலா தான் ஒரு வீடு எடுத்துக் கொடுத்து, அவருக்கு ஒவ்வொரு மாதமும் வாடகை கொடுத்து வந்திருக்கிறார். நேற்று இரவு 11 மணி வரைக்கும் அபிநய், KPY பாலாவிடம் பேசியிருக்கிறார். அப்போது, வாடகைப் பணத்தை போட்டு விடச் சொல்ல, பாலாவும் இரவே வாடகை பணத்தை அனுப்பி வைத்து இருக்கிறார். ஆனால், இன்று காலையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பாலாவை நிலைகுலைய செய்துள்ளது.
யார் இந்த அபிநய்
'துள்ளுவதோ இளமை' படத்தில் தனுஷுடன் அறிமுகமான அபிநய், 'சிங்காரச் சென்னை', 'பொன் மேகலை' போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 'துப்பாக்கி' பட வில்லனுக்குப் பின்னணிக் குரல் கொடுத்த இவர், 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் வறுமையில் வாடிய அபிநய்க்கு பண பற்றாக்குறையால் கல்லீரல் பாதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, அவர் வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் வெளியாகித் திரையுலகை உலுக்கியது. அவரது நிலை அறிந்து நடிகர் தனுஷ் 5 லட்சம் ரூபாயும், KPY பாலா 1லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர்.
அபிநயின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை ஏவிஎம் மின் மயானத்தில், KPY பாலா மற்றும் நடிகர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பூச்சி முருகன் ஏற்பாட்டில் நடைபெற்றன. அன்பால் பிணைந்த இந்தத் தம்பியின் இறுதி பயணம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications