சன் டிவி சீரியலில் இருந்து விலகிய கதாநாயகன்.. அடப்பாவமே இப்படி ஒரு காரணமா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியல் கதாநாயகனாக நடித்துவரும் அக்னி திடீரென்று தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை அக்னி வெளியிட இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் அக்னி ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். அந்த சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து திடீர் என்று விலகிய பிறகு அவருக்கு பதிலாக சீரியலின் முடிவு வரைக்கும் நடித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து தான் 2023 ஆம் ஆண்டு முதல் மலர் சீரியலில் கதாநாயகனாக அக்னி நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் திடீரென்று இப்போது சீரியல் விட்டு விலகும் முடிவெடுத்திருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து விட்டாலே ரசிகர்களின் மனதில் பதிந்து விடலாம் என்று தான் பல நடிகர் நடிகைகள் சன் டிவி சீரியல்களில் நடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பல சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து அந்த சீரியலில் நடித்தும் பிரபலங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் சன் டிவியில் தொடங்கிய பல சீரியல்களை சொல்லலாம். அதிலும் சன் டிவியில் எதிர்நீச்சல், கயல், சிங்க பெண்ணே, வானத்தைப்போல என பல சீரியல்கள் டிஆர்பியில் நல்ல இடத்தில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் ஒன்றுதான் மலர் சீரியல். இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக பிரீத்தி ஷர்மா நடித்து வருகிறார்.

நடிகை ப்ரீத்தி ஷர்மா ஏற்கனவே சித்தி2 சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் அந்த சீரியல் முடிவடைந்ததும் மலர் சீரியல் தொடங்கப்பட்டது. தற்போது வரைக்கும் மலர் சீரியல் 250 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அக்னி திடீரென்று இந்த சீரியலில் இருந்து தான் விளக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்.
அதற்கு காரணம் தனக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு விட்டது. அது குணமடைய நீண்ட காலம் ஆகும் என்பதாலும் இந்த சீரியல் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒளிபரப்பாக வேண்டும் என்பதாலும் தான் நான் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளேன் என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு புதிய அர்ஜுனாக வருபவருக்கு நல்ல ஆதரவு கொடுத்து இந்த சீரியலை ஹிட் ஆக்க வேண்டும் என்றும் பதிவு செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் இதற்கு அதிகமானோர் அக்கினியின் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் தயவு செய்து இந்த சீரியலை விட்டு நீங்க விலகியது ரொம்பவே நல்லது, ஏனென்றால் இந்த சீரியல் பகல் நேரத்தில் ஒளிபரப்பு ஆவதால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றும் கருத்து கூறி வருகின்றனர். ஏற்கனவே அக்னி நடிகராக வருவதற்கு முன்பு தொகுப்பாளராக பிரபல youtube சேனலில் பணிபுரிந்து இருந்தார். இவர் மீண்டும் எப்போது நடிக்க தொடங்குவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications