என் முதுகு முழுக்க வடு! என்னை குத்தி குத்தி கொலை செஞ்சாங்க! தனக்கு நடந்த துரோகம், கண்ணீர் விட்ட ஆனந்தராஜ்
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பாலும் மிரட்டலான லுக்காலும் மிரட்டியவர் தான் ஆனந்தராஜ். அதிலும், சில ட்ரேட்மார்க் வசனங்களால் ஒருகாலத்தில் ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் ஆனந்தராஜ். தற்போது அவர் அதிகமாகக் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தைத் தந்திருக்கும் நிலையில், தனது சினிமா வாழ்க்கைச் சவால்கள் குறித்துப் பேசும்போது, அவர் மேடையில் கண் கலங்கி அழுதது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
'மதராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஆனந்தராஜ் தனதுக் கடந்த காலப் போராட்டங்களையும், தான் சினிமாவை விட்டு நீக்கப்பட்ட வலிகளையும், கண்ணீர்மல்கப் பகிர்ந்து கொண்டதைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

யார் இந்த ஆனந்தராஜ்
தமிழ் சினிமாவுக்குப் பின்புலம் இல்லாமல், கடுமையானப் போராட்டத்துடன் நடிகரானவர் ஆனந்தராஜ். ஆர்.கே. செல்வமணி, உதயகுமார் போன்றோருடன் சேர்ந்து இவர் திரையுலகில் போராடி வந்தவர். 1980களின் பிற்பகுதி மற்றும் 90களில் இவர் நடித்தப் படங்கள் இவருக்கு ஒரு தனி வில்லன் அந்தஸ்தைக் கொடுத்தன. 'புலன் விசாரணை', சூரியவம்சம், பாட்சா போன்ற படங்களில் இவரது வில்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது.
மாறிய பாதை
பின்னர், காமெடி வில்லன், குணச்சித்திர நடிகர் என்று தனது பாதையை மாற்றிக் கொண்டு 'விஐபி', 'வேலைக்காரன்' போன்றப் படங்களில் நடித்து, மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார். நடிகர் ஆனந்தராஜ் தனது சராசரி நடிகனின் வலிகளையும், பெரிய நடிகர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் தனக்குக் கிடைக்காததையும் குறித்துப் பேசியது, திரையுலகின் இருண்டப் பக்கத்தைப் பிரதிபலித்தது.

பின்புலம் இல்லாத போராட்டம்
"ஒரு பெரிய நடிகர் தன்னைப் பற்றி, 'எல்லாம் நானாகக் கட்டிய வீடு' என்று தனது கெரியரைச் சொல்லும்போது அனைவரும் ரசிப்போம். நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாருமே இல்லை, பின்புலம் கிடையாது, திரையுலகில் முன்னோர்கள் கிடையாது. சிறுவயதில் செத்துச் சுண்ணாம்பு ஆகியுள்ளேன்.. தன்னுடைய தந்தையின் மரணத்தின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை ஆனந்தராஜ் பகிர்ந்துகொண்டபோது, அவரதுக் கண்கள் கலங்கிவிட்டன.
பார்த்திபன் சாரின் படப்பிடிப்பில் இருந்தபோது, சீக்கிரமே ஷூட்டிங் முடிந்தது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கால்ஷீட் வேண்டாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் அப்பா இறந்துவிட்டதாகத் தகவல் வர, அவர் வீட்டுக்குச் சென்று அப்பாவின் உடலைப் பார்த்துக் கேட்டது: "நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எனது படப்பிடிப்புகள் எல்லாவற்றையும் ஃப்ரீ செய்தீர்களா அப்பா?" என்றுதான்.
கண்ணீர் விட்டு கதறிய ஆனந்தராஜ்
இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வைப் பேசும்போது, அவர் கண் கலங்கி அழுதார். "இது எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். இது பெரிய நடிகராக இருந்தால் அது பெரிய விஷயமாக மாறும். நான் ஒரு சராசரி நடிகர். எனக்குப் போட்டியே இல்லை என்று நினைக்கிறீர்கள்" என்று அவர் பேசியபோது, அரங்கத்தில் இருந்தவர்கள் கனத்த மனதுடன் இருந்தனர்.
முதுகு முழுக்க வடுக்கள்
ஆனந்தராஜ் தனது திரையுலக வேதனையை வெளிப்படுத்தும்போது, அவர் பேசிய 'கொலை' என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "என்னைவிட 25 கோடிக்குப் பெரிய கொலையாளி யார் தெரியுமா? எனது முதுகு முழுவதும் காயம். ஒரே ரத்தமும் வடுக்களும் தான் உள்ளது. என்னைக் குத்தி குத்திக் கொலை செய்துவிட்டார்கள்." என்று அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
காரணம்
"ஒரு படம் வீட்டிற்கு வந்து பேசுவார்கள், அதன் பின்னர் அந்தப் படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டு விடுவேன். அதற்கு அந்தப் படத்தின் கதாநாயகனோ அல்லது வேறு யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள்", "எனக்கு வேறு வழி தெரியவில்லை சார், 'மதராஸ் மாஃபியா கம்பெனி' படத்தில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து கலையைக் கலையாகப் பாருங்கள்" என்று அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
தன் கலைத் திறமைக்கான அங்கீகாரத்தையும், சினிமாவில் நீக்கப்படுவதால் ஏற்படும் வலிமையையும் ஒருசேரப் பேசிய ஆனந்தராஜின் வார்த்தைகள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications