மாரிமுத்துவுக்கு 11 நாள் முன்னாடியே வயிற்றில்! ரோட்டில் கூட ஆக்சிடென்ட்.. அப்பல்லோ ரவி சொன்ன ரகசியம்
சென்னை: நடிகரும் பிரபல இயக்குனருமான மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமான காலமானார். அவருடைய திடீர் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் அவரைப் பற்றி அவரோடு நடித்த நடிகர்கள் அவருடைய நண்பர்கள் பலர் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அவரோடு நடித்த நடிகர் அப்பல்லோ ரவி மாரிமுத்து பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியிருக்கிறார்.
நல்லபடியாக பலருக்கும் பிடித்தவர்களாக இருக்கும் ஒரு சிலர் திடீரென்று உலகத்தில் இல்லாமல் போய் இருப்பது போன்ற அதிர்ச்சியை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி தான் காலை வரைக்கும் நல்லபடியாக சிரித்து பேசி மகிழ்ச்சியோடு இருந்த நடிகர் மாரிமுத்து டப்பிங் ஸ்டுடியோவில் உடல் நல குறைவு ஏற்பட அதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு போய் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இதனால் மாரிமுத்துவின் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அப்பல்லோ ரவி மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 11 நாளுக்கு முன்னாடி நான் மாரிமுத்துவின் வயிற்றைப் பார்த்து அவரிடம் சார் என்ன வயிறு ஜெமினி பிரிட்ஜ் மாதிரி இருக்கு என்று கேட்டேன்.
காரணம் எப்போதும் இருப்பதை விட மாரிமுத்துவின் வயிற்றில் எனக்கு அப்போது மாற்றம் தெரிந்தது. அவருடைய வயிறு உப்பலாக தெரிந்ததால் தான் நான் அந்த கேள்வி கேட்டேன். அதற்கு என்னை பாத்தா உனக்கு பேஷண்ட் மாதிரி தெரியுதா நீ என்னை பார்த்து எப்படி இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம்? நீ ஜெமினி பிரிட்ஜ் பாத்திருக்கியா என்று என்னை திட்டினார். அதற்கு நான் தினமும் ஜெமினி பிரிட்ஜ்லதானே நான் வந்துட்டு போயிட்டு இருக்கேன் என்று சொன்னேன்.
நான் மருத்துவத்துறையிலும் இருப்பதால் அவரிடம் அண்ணே ஒரு ரெண்டு மணி நேரம் தானே என் கூட வந்து செக்கப் பண்ணிட்டு வந்துரலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் மீண்டும் என்னிடம் நான் என்ன பேஷண்ட் மாதிரியா இருக்கேன். என் உடம்ப பாரு என்று சொன்னார். ஆனால் அவருக்கு அதற்குப் பிறகு சில நாட்களிலே இப்படி ஆகிவிட்டது என்று நான் அதிர்ச்சியானேன். அவருடைய உடலை பார்த்தபோது கூட அண்ணே அன்னைக்கே நான் கூப்பிட்டேனே நீங்க என்கூட வந்து இருக்கலாமே என்றுதான் நான் அழுதேன்.

அதுபோல மாரிமுத்து அண்ணனுக்கு ரொம்பவே மன தைரியம். அன்னைக்கு டப்பிங் பேசிட்டு இருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கு. அவருடைய உடம்பெல்லாம் வேர்த்து ஊத்திருக்கு. அப்போது அங்கிருந்தவர்கள் கூட ஏசி வேலை செய்யவில்லை என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் இவருக்கு அதிகமான மன தைரியம் இருக்கிறது. அதனால் தான் அவர் கீழே வந்து தன்னுடைய மனைவிக்கு எனக்கு கேஸ் ட்ரபுள் மாதிரி இருக்கு நான் ஹாஸ்பிடலுக்கு போறேன் நீ அங்கேயே வந்துரு என்று சொல்லிவிட்டு தன்னந்தனியாக காரை எடுத்து விட்டு போயிருக்கிறார்.
ஆனால் காரில் போகும்போதும் அவருக்கு வலி அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அதையும் அவர் அடக்கிக் கொண்டு அந்த வலியோடு தான் மருத்துவமனைக்கு போயிருக்கிறார். எந்த இடத்திலும் யாருக்கும் எந்த ஒரு கஷ்டமும் கொடுக்காமல் போகிற வழியில் எந்த ஒரு ஆக்சிடெண்டும் பண்ணாமல் வைராக்கியத்தோடு போயிருக்கிறார். ஒருவேளை அவரே தன்னால் வலி தாங்க முடியாமல் ஏதேனும் ஆக்சிடெண்ட் செய்து இருந்தால் என்ன நிலைமை ஆயிருக்கும்?
ஆனாலும் அவர் பொறுப்பாக கடைசி நேரத்தில் கூட மருத்துவமனைக்கு காரில் பத்திரமாக போயிருக்கிறார். இதை நினைத்து நான் ஆறுதல் பாடவா? அல்லது வருத்தப்படவா என்று எனக்கு தெரியவில்லை என்று அந்த பேட்டியில் நடிகர் அப்பல்லோ ரவி கதறி அழுது இருக்கிறார். நடிகர் அப்போலோ ரவி நடிகராக மட்டுமல்லாமல் மருத்துவத்துறையிலும் வேலை பார்த்து வருகிறார். தெய்வமகள் சீரியலில் இவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications