Vidaamuyarchi: நானே அஜித்தின் ரசிகர் தான்.. அவர் இந்த விஷயத்தை சொல்லிட்டே இருப்பாரு! ஆரவ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமார், திரிஷா மற்றும் பலருடைய நடிப்பில் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த ஆரவ் திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து நடிகர் அஜித் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் ஆரவ் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 1வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சிலருக்கு மட்டும்தான் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆரவ் ஒருவர். அவர் தற்போது நடிகர் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

vidaamuyarchi ajith kumar trisha

விடாமுயற்சி திரைப்படம் குறித்து அடிக்கடி அப்டேட் கொடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களையும் ஆரவ் வெளியிட்டு வந்தார். அதுபோல விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன் ரெஜினா, சந்தீப் கிஷன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெற்று இருந்த நிலையில் பலருடைய எதிர்பார்ப்பின்படி இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்த பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது.

vidaamuyarchi ajith kumar trisha

அதிலும் ரீலிஸ்களில் விடாமுயற்சி திரைப்பட பாடல்கள் தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வந்த ஆரவ் அஜித் குறித்து பேசி இருக்கிறார். அதில் விடாமுயற்சி படம் இன்று வெளியாகி இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

vidaamuyarchi ajith kumar trisha

அஜித் சார் எப்போதும் ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பார். அதாவது மக்கள் மீதும் ரசிகர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பா வரவேற்பு பெறும் என்று சொன்னார். அது போல இப்போது பலரால் இந்த படம் பாராட்டப்படுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் அஜித் சாரின் ஒரு ரசிகரான நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் அனைவரின் கடின உழைப்பையும் மக்கள் பார்ப்பார்கள். அஜித் சார் எப்போதும் ரசிகர்கள் பற்றி பேசுவார். ரசிகர்கள் மீது அக்கறை கொள்வார். அதனால் தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு மெசேஜை கொடுத்துக்கொண்டே இருப்பார்.

vidaamuyarchi ajith kumar trisha

நேற்று கூட அஜித் சாரிடம் பேசினேன். அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று ஆரவ் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அஜித் கார் ஓட்டும்போது விபத்துக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அஜித்துடன் ஆரவ் இருந்தார். நிஜத்தில் நடந்த விபத்துக்காக ஆரவ் மனைவியிடம் நடிகர் அஜித் மன்னிப்பு கேட்டிருக்கிறார்‌. இது குறித்து ஆரவ் ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+