2வது மருமகன் பற்றி நெகிழ்ச்சி போஸ்ட் போட்ட அர்ஜுன்.. இவருக்குள் இப்படி ஒரு மனதா? குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் அர்ஜுன் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு விரைவில் திருமணம் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய வருங்கால மருமகன் பற்றி அந்த பதிவில் நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். அர்ஜுன் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் ஆக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும், முன்னணி நடிகராகவும், வில்லனாகவும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் கொண்டிருக்கிறார். இவருடைய மூத்த மகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

அர்ஜுன் மகள் போஸ்ட்
அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா நேற்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய வருங்கால கணவரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அர்ஜுன் குடும்பத்தினரும் அந்த புகைப்படங்களில் இடம் பிடித்திருந்தனர். அதனால் இவர்களின் எங்கேஜ்மென்ட் எளிமையாக நடைபெற்று விட்டதா? திருமணம் எப்போது? என்ற கேள்விகள் இணையத்தில் எழுந்து வருகிறது.
அர்ஜுன் பதிவு
இந்த நிலையில் அர்ஜுன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். "என்னுடைய இளவரசி அஞ்சனா விரைவில் ராணி ஆகி விடுவாள். எனது இரண்டாவது மகன் ஈசாயாவை நான் வீட்டிற்கு வரவேற்க போகிறேன். என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள். இப்போது நேரம் வேகமாக நகர்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ் யூ ரோத்..." என்று தன்னுடைய மகள் மற்றும் வருங்கால மருமகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
விரைவில் திருமணம்
அர்ஜுனின் மகள் திருமணம் எப்போது என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு வேலை நாளை திருமணம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அர்ஜுன் குடும்பத்தினர் ஏற்கனவே போட்டோ சூட் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். நாளை திருமணம் முகூர்த்த நாளாக இருக்கும் நிலையில் நாளை தான் இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்து வருகிறது. காரணம் அர்ஜுன் தன்னுடைய பதிவில் என்னுடைய மகள் ராணியாக போகிறாள், அதற்காக நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் நாளையாக இருக்கும் என்று பலர் கூறி வருகிறார்கள். அது குறித்து அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
நிஜத்திலும் கதாநாயகன்
அதுபோல நடிகர் அர்ஜுன் கன்னட நடிகையான நிவேதிகா என்பவரை கடந்த 1988 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

காதல் திருமணம்
அந்த நேரத்தில் தான் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூத்த மகள் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட்டார். ஆனால் இரண்டாவது மகள் அஞ்சனாவிற்கு நடிப்பது பிடிக்கவில்லை பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாம். அதனால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.
தொழிலதிபர்
தான் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக அஞ்சனா தான் இருந்து வருகிறார். அஞ்சனாவின் நிறுவனத்தில் செய்யப்படும் ஹேண்ட் பேக்குகள் எல்லாம் பழங்களின் தோல்கள் மற்றும் காய்கறிகள் தோல், நார் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறதாம். இந்த நிலையில் கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின் ப்ரொபோசலை ஏற்றுக் கொண்டதாக நேற்று அவரோடு எடுத்த புகைப்படங்களை அஞ்சனா சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications