10 வருஷத்துக்கு முன்பே மேஜர் முகுந்த் குடும்பத்தை கௌரவித்த அர்ஜுன்.. நெகிழ வைத்த காரணம்
சென்னை: அமரன் திரைப்படத்திற்கு பிறகு மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை பலரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 10 வருடத்திற்கு முன்பே அவருடைய குடும்பத்திற்கு அர்ஜுன் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்து வரதராஜரின் வாழ்க்கை படமாக இருக்கிறது.

இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம் நாட்டிற்காக போரில் முகுந்த் வரதராஜன் உயிர் தியாகம் செய்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் ஆக்சன் கிங் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் 2 திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தை இசை வெளியிட்டு விழா முகுந்த் இறந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது.
அந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக காஷ்மீர் போர்க்களத்தில் போராளிகளுடன் போராடி உயிர் நீத்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரை அர்ஜுன் அழைத்திருந்தார். அப்போது அவருடைய 3 வயதான மகள் ஹர்ஷிதா தான் படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
அப்போது அர்ஜுன் பேசுகையில் நானும் ஒரு மிலிட்டரி ஆபீசராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருநாள் அதற்கான விண்ணப்பத்தை கொண்டு போய் என்னுடைய அப்பா அம்மாவிடம் கொடுத்தபோது அதில் உயிருக்கு என்ன ஆனாலும் நாங்க தான் பொறுப்பு என்று பெற்றோர் கையெழுத்து போடும் இடத்தில் என்னுடைய அம்மா கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.இல்லை என்றால் நானும் மிலிட்டரிக்கு போய் இருப்பேன் என்று பேசி இருந்தார்.

அப்போது முகுந்தின் தந்தை நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அந்த மரியாதை என்னுடைய மகனை சேரும் என்று பேசி இருந்தார். அதுபோல அமரன் திரைப்பட வெற்றி விழாவில் முகுந்தின் தந்தை பேசும்போது கூட தன்னுடைய மகன் மூன்று வயதாக இருக்கும்போதே கார்டனில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நான் மிலிட்டரி ஆபீஸராக மாறுவேன் என்று சொல்வான்.
அதற்கு காரணம் அந்த நேரத்தில் ஜெய்ஹிந்த் படத்தை பார்த்துவிட்டு தான் அவர் அந்த முடிவு எடுத்தார் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவல்கள் தற்போது கேட்போரை நெகிழ வைத்திருக்கிறது. சமீபத்தில் பல திரைப்படங்களில் திருடர்களையும், கொலை செய்பவர்களையும் தான் கதாநாயகர்களாக காட்டப்பட்டு வரும் நிலையில் அமரன் திரைப்படம் நிஜத்தில் தன்னுடைய காதல் மனைவி, குழந்தை, குடும்பம் என எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய நாட்டை நேசித்த ஒரு அற்புதமான மனிதருக்கு மரியாதை செய்து இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications