தவெக- க்கு சப்போர்ட் செய்ததால் என் வருமானம் போச்சு.. எனக்கு எதிராக நடந்த சம்பவம்! நடிகர் அருண் ராஜா உருக்கம்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பில் உள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அவரது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டு வந்த சீரியல் நடிகர் அருண் ராஜா உருக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்சி அமைப்பதில் சிக்கல்
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி பல இடங்களில் வெற்றி பெற்று அரசியல் அரங்கில் வலுவான நிலையை பெற்றுள்ளது. ஆனால், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள், அரசியல் பேச்சுவார்த்தைகள், எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் என பல்வேறு பரிமாணங்களில் சூழல் நகர்ந்து வருகிறது.
"விஜய் முதலமைச்சராக முடியுமா முடியாதா?" என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அருண் ராஜா வீடியோ
விஜயின் அரசியல் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே சீரியல் நடிகர் அருண் ராஜா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு, தன்னை தவெக கட்சியின் உறுப்பினராகவே அடையாளப்படுத்திக் கொண்டு விஜய்க்கு ஆதரவு அளித்தார். மேலும், ஜூலி விஜயை விமர்சித்த சமயத்தில் கூட ஜூலிக்கு எதிராக பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
அருண் ராஜா பேசியது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது தா வேகாவிற்கு சப்போர்ட் செய்ததால் தனது வருமானம் தான் போச்சு என்று உருக்கமாக பேசி இருக்கிறார். அதாவது, நான் தவெகாவிற்கு சப்போட்டா வீடியோ போடறது ஃபாலோவர்ஸ் கூட்டறதுக்காக என்று சொல்கிறார்கள். ஆனால் பாலோவர்ஸ் கூட்டி வைத்து என்ன பிரயோஜனம்? பாலோவர்ஸ் திடீர்னு எல்லாரும் அன்பாலோ பண்ணிட்டு போயிருவாங்க அப்படி போயிட்டா நாம ஜீரோவுக்கு வந்துடுவோம். அதனால எனக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது.
ஆனால் நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜய்க்கு சப்போர்ட் பண்ண தொடங்கியதால் சில ப்ராஜெக்ட் எனக்கு கைவிட்டு போய்விட்டது. சில ப்ராஜெக்டில் நான் நிறுத்தப்பட்டேன். அதனால் எனக்கு வருமானம் தான் போச்சு எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் நான் விஜய்க்காக தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று பேசி இருக்கிறார்.
அரசியல் + சினிமா தாக்கம்
இந்த சம்பவம், அரசியல் ஆதரவு ஒரு கலைஞரின் தொழில் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அரசியல் அடையாளம் கிடைத்தாலும், மறுபுறம் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற நிலை உருவாகும் என்பதையும் இது காட்டுகிறது.
அடுத்த கட்டம்
தற்போதைய சூழலில், விஜய் அரசியல் ரீதியாக தேவையான ஆதரவை திரட்டிக் கொண்டு ஆட்சி அமைப்பாரா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. அவரை ஆதரித்து வந்தவர்களின் குரலும், நிலைமைகளும் இந்த அரசியல் பயணத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications