பிரியாணியில் முட்டையை மறைச்சு..நடிகர் ஆர்யாவிடம் ரெயிடு ஏன்? சீ ஷெல், ரூ.80 லட்சம் கேஸ் பற்றி பிரபலம்
சென்னை: சென்னையில் தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்திருந்தார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு, நடிகர் ஆர்யா நேற்றைய தினம் மறுப்பு தெரிவித்திருந்தார்..

"ஐடி ரெய்டு நடக்ம் ஓட்டல் வேறு ஒருவருடையது" என ஆர்யா தெரிவித்தார்.. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த உணவகங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.
தயாரிப்பாளர்கள் வீடுகளில் ரெய்டு
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவோ, "சமீப காலமாகவே சினிமா தயாரிப்பாளர்களிடம் ரெய்டுகள் நடந்து வருவது அதிகரித்துள்ளது.. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் இந்த ரெய்டுகள் அதிகரித்து காணப்படுகிறது.
ஆர்யாவை பொறுத்தவரை, அவரும் ஒரு தயாரிப்பாளர்தான்.. சீ-ஷெல் என்ற பெயரில் நிறைய இடங்களில் ஓட்டல்களில் ரெயிடு நடத்தப்பட்டுள்ளது..
சீ-ஷெல் ஓட்டல்கள்
ஆனால், இந்த சீ-ஷெல் ஓட்டல்களுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்யா சொல்கிறார்.. ஆனால், ஓட்டல் தரப்பிலிருந்து அதுகுறித்து எந்த பதிலும் சொல்லப்படவில்லை. அமைதியாகவே இருக்கிறார்கள்.. ஆர்யா ஓட்டலில் ரெயிடு என்ற செய்திகள் வந்ததற்கு, ஓட்டல் தரப்பிலிருந்துதான் பதில் வந்திருக்க வேண்டும்.. இந்த ஓட்டல் எங்களுடையது, ஆர்யாவுடையது கிடையாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அமைதி காக்கிறார்கள்.
ஆனால் அந்த ஓட்டல் யாருடையது என்று சினிமா உலகில் உள்ளவர்கள் உட்பட பலருக்கும் தெரியும்.. நயன்தாரா உட்பட பலரும் வந்திருக்கிறார்கள்..முழு முட்டையை பிரியாணியில் மறைப்பதுபோலதான்.. பல இடங்களில் பினாமிகளை வைத்துதான் பிசினஸ் செய்கிறார்கள்..
பெரிய பெரிய ஓட்டல்
இந்த சீ-ஷெல் ஓட்டல் அண்ணாநகர் உட்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.. ஆனால், எளிய மக்கள் காசு தந்து சாப்பிட முடியாத, பெரிய ஓட்டலாகும். ஒருவேளைக்கு ஒருத்தர் சாப்பிட வேண்டுமென்றாலே, குறைந்தபட்சம் 5 ஆயிரம் இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.
ஆர்யா காசர்கோட்டில் பிறந்தாலும், கேரளாவில் எடுபடவில்லை.. தமிழகத்தில்தான் ஆர்யாவின் வளர்ச்சி உள்ளது.. அதற்காக ஆர்யா பெரிய நடிகர் கிடையாது.. அனைவராலும அறியப்படுகிற நடிகர் மட்டுமே.
ஜெர்மனி விட்ஜா
அரசியல் கூட இந்த ரெயிடுக்கு காரணமாக இருக்கலாம்.. பெண்கள் சார்ந்த விமர்சனங்கள் நடிகர்கள் மீது சுமத்தப்படுவது இயல்பானது.. அந்தவகையில் ஆர்யா மீதும் சுமத்தப்பட்டது.. ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணும் புகார் கூறியிருந்தார்..
சோஷியல் மீடியாவில் விட்ஜா என்ற பெண்ணிடம் தொடர்பு ஏற்படுத்தி , பிறகு அவரை திருமணம் செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறார்.. இத்தனைக்கும் ஆர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அப்படியிருந்தும், தன்னுடைய மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆர்யா வாக்குறுதி தந்ததாக, பாதிக்கப்பட்ட விட்ஜா தரப்பில் கூறப்படுகிறது..
அதுமட்டுமல்ல, தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி 80 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி நீதிகேட்டு, அந்த பெண், நீதிமன்றம்வரை சென்றார்.. இந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
அரசியல் பின்புலமா?
அந்தவகையில் ஆர்யா அறியப்பட்ட நடிகர்தான்.. சினிமா பட தயாரிப்பாளராக உள்ளதால், இதுபோன்ற ரெய்டு நடத்தப்படுகிறது.
அதேபோல, இவர் மீதான வழக்கு ஏன் இன்னமும் நிலுவையில் உள்ளது? அதுதொடர்பாக வழக்கு விசாரணையே முறையாக நடத்தப்படாமல், தடுக்கப்பட்டால், இதன் பின்னணியில் உள்ளது யார்? எந்த அரசியல் கட்சி? என்ற கேள்விகள் இயல்பாகவே எழலாம்.. அதன் தொடர்ச்சியாகவும் இந்த ரெய்டுகள் நடந்திருக்கலாம்" என யூகமாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications