சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் அதர்வா.. ஆரம்பமே அசத்தல்.. நடிகர் சரத்குமார் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா நடிகர் சரத்குமாருக்கு போன் செய்து இருக்கும் நிலையில் அவர் கடி ஜோக் சொல்லி கலாய்த்து இருக்கிறார்.இந்த நிலையில் கலகலப்பாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வா முதல் முதலாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலமாக திரை துறையில் காலடி எடுத்து வைத்து அதைத் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த மந்தகம் என்ற வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். தற்போது பல நடிகர்கள் தாங்கள் நடித்த திரைப்படம் வெளியாகும் போது அதன் பிரமோஷனுக்காக சின்ன திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அதர்வாவும் முயற்சி செய்து இருக்கிறார். விஜய் டிவியில் தகுதியான பெண் கதாநாயகியை தேர்ந்தெடுப்பதற்காக புதியதாக கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இது சனி மற்றும் ஞாயிறு இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிரியங்காவும் குரோஷியும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சின்னத்திரை நடிகைகளும் கதாநாயகி போட்டியாளர்களும் இணைந்து நடிப்பதால் மகா சங்கமம் என்ற பெயரில் இந்த வாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பல சீரியல் நடிகைகளும் கலந்து கொண்டு கதாநாயகி போட்டியாளர்களோடு சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படியான நிலையில் ராதிகா சரத்குமாருக்கு போன் போடுகிறார். அப்போது பிரியங்கா சரத்குமார் இடம் உங்க மனைவி நீங்க நல்ல கடி ஜோக் சொல்வீங்க என்று உங்களுக்கு அவர் கையாலயே கால் போடுகிறார் என்று சொல்ல, அதற்கு நடிகர் சரத்குமார் போனில் கால் கூட கையால தான் போடணும் என்று சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கதாநாயகி போட்டியாளர்களுடன் சேர்ந்து நடிகர் அதர்வாவும் நடித்திருக்கிறார். அதுவும் அந்த ப்ரோமோவில் இடம் பெற்றிருக்கிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications