நான் அப்பாவாக போறேன்.. அறிவித்த விஜய் டிவி ஹீரோ.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அண்ணன்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அவினாஷ் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதாவின் அண்ணன் தான்.

நடிகர் அவினாஷ் சீரியல் நடிகராக பிரபலமடைவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். அதற்கு பிறகு ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து நடன கலைஞராக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்டிக்கொண்டு இருந்தார்.

vijay tv baakiyalakshmi serial

அந்த நேரத்தில் தான் அவினாஷ்க்கு அழகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடிகர் தலைவாசல் விஜய் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ரேவதியும் நடித்திருந்தார்கள். அதில் இந்த தம்பதியின் மகனாக அவினாஷ் நடித்திருந்தார். முதல் சீரியலிலே இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.

அதற்கு பிறகு அம்மன், சாக்லேட் போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான கயல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று கயல் சீரியலில் இருந்து விலகிவிட்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

vijay tv baakiyalakshmi serial

அதுபோல விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடி கொண்டு இருந்தபோது அவருக்கு காலில் அடிபட்டதால் சில மாதங்கள் அவர் வீல்சேரில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார். அப்போது பல தன்னம்பிக்கையான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.

அதுபோல அவருடைய தங்கையான நடிகை அன்ஷிதாவோடு அதிகமான ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். அன்ஷிதா விஜய் டிவியில் பல சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

vijay tv baakiyalakshmi serial

இந்த நிலையில் நடிகர் அவினாஷ் தன்னுடைய 13 வருட காதலியான தெரசா என்பவரை கடந்த வருடத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை கியூட் புகைப்படங்களோடு அறிவித்திருக்கிறார்.

தன்னுடைய மனைவியின் பிரக்னன்சி ரிப்போர்ட் மற்றும் குழந்தையின் ஸ்கேன் போட்டோவை வைத்து இவர்கள் போட்டோ சூட் எடுத்திருக்கிறார்கள். இது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+