23 வயது மலேசிய பெண்ணுடன் திருமணமா.. எனக்கா.. மனம் திறந்த நடிகர் பப்லு பிரித்திவிராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 23 வயது பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டேனா என சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.

தமிழ், தெலுங்கு, கனடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் பப்லு என்கிற பிரித்திவிராஜ். இவருக்கு வயது 56. இவர் கே பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை எனும் படத்தில் இளமை தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகு பாண்டிநாட்டு தங்கம், அழகன், வீரமணி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கண்ணான கண்ணே எனும் சீரியலில் நடித்து வருகிறார். நடிகர் பப்லுவுக்கு பினா என்கிற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆனது. இவர்களுக்கு 25 வயதில் அஹத் எனும் மகன் உள்ளார்.

ஆட்டிசம் குறைபாடு

ஆட்டிசம் குறைபாடு

இவரது மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது. இதனால் சில ஆண்டுகள் சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஓய்வெடுத்து மகனை குணப்படுத்த நிறைய சிகிச்சை முறைகளை பப்லு மேற்கொண்டார். இந்த நிலையில் பப்லுவுக்கும் பினாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என தெரிகிறது.

நடிகர் பப்லு

நடிகர் பப்லு

இந்த நிலையில் நடிகர் பப்லு 2ஆவது திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகின. அதாவது 56 வயதாகும் பப்லு இரண்டாவதாக 23 வயதுடைய மலேசிய பெண்ணுக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது என்ற கேள்வி எழுந்தது. மேலும் உண்மையிலேயே இந்த திருமணம் நடந்ததா, இல்லை வதந்தியா என்றும் தெரியாமல் இருந்தது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

இந்த நிலையில்தான் இந்த சர்ச்சைகளுக்கு பப்லு விளக்கமளித்ததன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பப்லு வீடியோ மூலம் விளக்கம் அளிக்கையில் நான் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக என்னிடம் எல்லோரும் போன் போட்டு கேட்டனர். நானும் அப்படியா என கேட்டேன்.

வதந்தி

வதந்தி

ஏதோ காமெடிக்காக என்னிடம் விளையாடுவதாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இந்த செய்தி வைரலாகிவிட்டது. இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நிச்சயமாக இன்னொரு திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அதை உங்களிடம் அறிவித்துவிட்டுதான் செய்வேன். திருட்டுத் தனமாக செய்ய மாட்டேன்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

எப்போதும் சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வெளியுலகிற்கு வரக் கூடாது என்பதில் நான் மிகவும் ஸ்டிராங்காக இருக்கிறேன். சினிமாக்காரர்கள் வீட்டில் ஏதேனும் சண்டை என்றாலும் அது மீடியாவுக்கு வந்துவிடுகிறது. கணவனை மனைவி திட்ட , மனைவியை கணவன் திட்ட என இந்த சண்டை பொதுவெளியில் வருகிறது. இவ்வாறு பிரித்திவிராஜ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+