Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு நடந்த துரோகம்.. நிறைய ஏமாந்துட்டேன்.. நான் எந்த தப்பும் பண்ணல.. பப்லு பிரித்திவிராஜ் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பப்லு தன்னுடைய காதலியான ஷீத்தலை பிரிந்து விட்டாரா என்ற கேள்விகளுக்கு முதல்முறையாக பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் நான் பல தப்பு செஞ்சு இருக்கிறேன். ஆனால் கடந்த முறை எந்த தப்பும் பண்ணவில்லை. ஆனா நான் நிறைய ஏமாந்துட்டேன் இனிமேலும் திருந்தலனா நான் முட்டாள் என்று பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதுபோல தான் எதற்காக பிறந்த நாளை எளிமையாக இந்த முறை கொண்டாடினேன் என்பதை பற்றியும் பிரித்திவிராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Actor Bablu has given an explanation has separated from his girlfriend Sheetal

இந்த நிலையில் பிரித்திவிராஜ் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி இருந்தார். அதுபோல அவருடைய காதலி ஷீத்தல் பிறந்தநாள் பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்ற கேள்வி இருந்தது. அதுபோல ஷீத்தல் தனியாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்த பிரித்விராஜ் இவரை சின்னத்திரை வட்டாரத்தில் பலர் பப்லு என்று அழைப்பது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்புவுடன் இவர் செய்த பிரச்சனை இவருக்கு பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து சின்ன திரையில் பிஸியாக நடித்து வரும் பிரித்விராஜ்க்கு கிட்டத்தட்ட 57 வயது என்று கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 23 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்திருந்த தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து தனியாக பப்லு வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக செய்திகள் வைரலானது. இடைத்தொடர்ந்து பப்லு பல பேட்டிகளில் எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம். எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் 30 வயதுக்கு மேலான வித்தியாசம் என்று இருக்கு என்று பேசி இருந்தார்.

அதனால் ரசிகர்கள் இதெல்லாம் சரியில்லை என்று கலாய்த்து கொண்டிருந்தனர். அதோடு இவர்கள் இருவரும் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது 90ஸ் கிட்ஸ்களை மேலும் வெறுப்பு ஏற்படுத்தியது.. அதனாலேயே பலர் வயிற்றெரிச்சலில் இவர்களுக்கு கமெண்டில் சாபமிட்டு கொண்டிருப்பர்.

இதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என்று கேள்வி கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கமாண்டை லைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இது பற்றி பப்லுவிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது நான் நிறைய ஏமாந்துட்டேன். இனிமேலும் திருந்தலன்னா நான் முட்டாள் என்று வருந்தி இருக்கிறார்.

அதோடு நான் பல தப்பு பண்ணிட்டேன் ஆனால் லாஸ்ட் டைம் எந்த தப்பும் பண்ணல. நான் எப்போதும் வெளிப்படையாக இருப்பேன். இதை வச்சு சிம்பத்தியோட நீங்க கிண்டல் பண்ணுவீங்க என்று நான் உண்மையை சொல்ல தயங்கவில்லை. இனிமேல் என்னை மட்டுமே கவனிக்க போறேன். இப்ப நான் சரியான பாதையில் போறேன்.

அதுபோல நான் ஒரு விஷயத்தை சொன்னா அதை 10 பேர் நல்லதா எடுத்துக்கிறாங்க. 10 பேர் நான் பேசியதை வைத்து என்னை கழுவி ஊத்துவாங்க. அது நமக்கு தேவையில்லை. அதோடு பேட்டியில் உங்களுக்கும் ஷீத்தலுக்கும் ஏதேனும் பிரச்சனையா? நீங்கள் பிரிந்து விட்டீர்களே என்று கேட்க அப்படி உங்களுக்கு யார் சொன்னா? நீங்களே முடிவு எடுத்துப்பீங்களா? நீங்க என்னிடமோ அல்லது அவளிடமோ இதைப்பற்றி யாராவது விசாரிச்சிங்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதோடு தனக்கு கடந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 11 லட்சம் செலவானது. அதனால்தான் இந்த முறை எளிமையாக தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்று விளக்கமும் கொடுத்திருந்தார். அது மட்டும் அல்லாமல் நான் என்னுடைய ஜட்டியை தெருவில் கழுவ விரும்பல என்று சொல்லி தனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக பேச விரும்பவில்லை என்று முடித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+