எதையும் சொல்ல மாட்டேன்னு சொல்லியே மொத்தத்தையும் உளறிய பப்லு.. காதலி பிரிவுக்கு அம்மா தான் காரணமா?
சென்னை: நடிகர் பப்லு அவருடைய காதலி ஷீத்தலை பிரிந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பப்லு பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசி இருக்கிறார்.
முதல் காதலி தன்னை விட்டு போனதும் தான் பெரியதாக வருத்தப்படவில்லை என்று பப்லு பேசியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதோடு 19 வயதில் 21 வயது பெண்ணை தான் காதலித்த விஷயத்தை பகிர்ந்திருக்கும் பப்லுவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அடிக்கடி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் பப்லு பிரிதிவிராஜ் இப்போதும் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் ஷீத்தல் விவகாரம்தான் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வருடங்களாக நடித்து வரும் பப்லு பிரித்திவிராஜ் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். பப்லு சினிமாவிற்கு அறிமுகமாகி 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர் பீனா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறார். தன்னுடைய மகன் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று பப்லு பல பேட்டிகளில் பேசி இருக்கிறார். அதோடு முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு காரணமாக பப்லு அவரை பிரிந்து இருந்த நிலையில் ஷீத்தல் என்ற பெண்ணோடு பப்லுவிற்கு அறிமுகம் ஆகி காதலாக மலர்ந்தது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவிய நிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்யவில்லை. இருவரும் லிவ்விங் ரிலேஷனில் இருக்கிறோம் என்று பப்லு பல பேட்டிகளில் பேசியிருந்தார். அதோடு இருவருக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கிறது என்றும் பல ரகசியங்களை உடைத்து இருந்தார். அதைத்தொடர்ந்து இருவரும் சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்து பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக இவர்கள் இருவரும் தாங்கள் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்ற செய்தி இணையத்தில் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி பிரித்விராஜ் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அப்போது அதற்கு மழுப்பலான பதில் சொல்லி முடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய முதல் காதல் பற்றிய ரகசியத்தையும் பப்லு உடைத்திருக்கிறார். அதில் என்னுடைய 19 வயதில் நானும் என்னுடைய தங்கையும் ஒரு டான்ஸ் போட்டிக்கு சென்றிருந்தோம். அங்கு ரொம்ப கூட்டமாக இருந்தது. அப்போது என்னவென்று விசாரிக்கும் போது அங்கு ஒரு மிஸ் இந்தியா பெண் வந்திருக்கிறார் என்று சொல்லி இருந்தார்கள். நான் அந்த பெண்ணை பார்க்க கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்தி இருந்தேன்.
ஆனால் என்னால் முடியவில்லை மீண்டும் மீண்டும் என் கண்கள் அங்கேயே போனது பிறகு நானும் என்னுடைய தங்கையும் டான்ஸ் போட்டியில் முதல் பரிசு பெற்றோம். அப்போது அந்தப் பெண் திடீரென்று என் கண் முன்னே வந்து என்னுடைய டான்ஸை பாராட்டி உங்களுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்று சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. நானும் ஆடலாம் என்று சொல்லி இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடினோம்.
கிட்டத்தட்ட இரண்டு மணி வரைக்கும் டான்ஸ் ஆடி கொண்டே இருந்தோம். பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து எங்களுடைய நட்பு காதலாக மாறியது. இதை என்னுடைய அம்மாவிடம் நான் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா உனக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறது, என்று என்னையும் திட்டி அந்த பெண்ணையும் திட்டிவிட்டார். அதனால் அந்த பெண் உன்னை நான் சந்திக்க மாட்டேன் உங்க அம்மா என்னை மோசமாக திட்டிவிட்டார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. போடி என்று விட்டுவிட்டு என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மூன்று மாதங்கள் கழித்து தான் அவருடைய நண்பன் அவளை பார்க்க வருமாறு சொன்னான். நான் என்னவென்று கேட்டபோது அந்த பொண்ணு கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சொன்னார்.
கிட்டத்தட்ட ஆறு மாதத்தில் அவள் கேன்சரால் இறந்துவிட்டாள் என்று அந்த பேட்டியில் பப்லு பேசியிருக்கிறார். ஏற்கனவே பேட்டிகளில் நான் இனி என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லியிருந்த பப்லு தன்னுடைய முதல் காதல் விஷயத்தை பற்றி போட்டு உடைத்து எடுப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications