Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் பப்லுவின் முன்னாள் காதலிக்கு கல்யாணம்.. கணவர் இந்த பிரபலம் தானா? அவரே வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பப்லு பிருத்விராஜ் காதலித்து வந்த அவருடைய முன்னாள் காதலி தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதோடு அவர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகர் பப்லு பிரத்தியவராஜ் மற்றும் சீத்தல் ஜோடி. 57 வயதான பப்லு ப்ரித்விராஜ் தன்னுடைய மகனை விட வயது குறைந்த பெண்ணான சீத்தலை தான் காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் பல youtube சேனல்களுக்கும் இருவரும் தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்தனர்.

television bablu prithiviraj

அப்போது பப்லு மற்றும் சீத்தல் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம் என்று இருவரும் பேசி இருந்தார்கள். அதுபோல இருவரும் அதிகமான புகைப்படங்களையும் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று சோசியல் மீடியாவில் இருந்த புகைப்படங்களை டெலிட் செய்து விட்டனர். இதனால் பப்லு மற்றும் சீத்தலிடம் ரசிகர்கள் கமெண்ட்களில் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்று கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு பப்லு ஆமாம் என்று வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் தான் சில தவறுகள் செய்துவிட்டேன் ஆனால் இப்போது தெரிந்து விட்டேன் என்று கூறி இருந்தார்.

ஆனால் சீத்தல் ஒரு பேட்டியில் பேசும்போது, எங்களுக்குள் என்னவென்றாலும் நடந்திருக்கலாம். ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என்று நினைத்து இருவரும் பிரிந்து விட்டோம். அது மட்டுமல்லாமல் காதலிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த அத்தனை பொருட்களையும் பிரித்விராஜிடமே நான் ஒப்படைத்து விட்டேன்.

bablu prithiviraj

முதல் முதலாக அவர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது ஒரு மோதிரம் கொடுத்தார் அதையும் அங்கேயே வைத்து விட்டு வந்து விட்டேன். அதோடு நல்ல வேலை எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை அதுவரைக்கும் சந்தோஷம். ஏனென்றால் எங்களுடைய திருமணம் நடந்திருந்தால் அது இரு வீட்டாரையும் பாதிக்கும். அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் அவரோடு லிவிங்கில் இருக்கும்போது திருமணத்திற்கும் காதலுக்கும் வயது ஒரு பிரச்சினையே கிடையாது என்று சொல்லி இருந்தேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். ஒருவர் மீது காதல் வருவதற்கு வயது ஒரு காரணமே கிடையாது, வயது என்பது வெறும் நம்பர் தான். உண்மையான மனது தான் காரணம், ஆனால் சில காரணங்களை வெளியே சொல்ல முடியாது. அது வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது என்று சீத்தல் பேசி இருந்தார்.

bablu prithiviraj

அதற்கு பிறகு இவர்கள் பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆணின் கைகளை பிடித்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் பதிலளிக்கப்படும் ஆமென்.. கடவுள் உங்களுக்காக பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். ஆமென்..

கடவுள் நமக்கு சிறந்ததை தருகிறார். நாம்மை அவருடைய குழந்தைகளாக நம்மை பாதுகாக்கிறார். ஆமென்.. என்று வசனத்தை குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு கீழே நான் எப்போதும் என் கடவுளை நம்பி இருக்கிறேன். ஆனாலும் இப்போது அவருடைய மந்திரத்தை உண்மையாகவே உணர்கிறேன், அனுபவிக்கிறேன்.

கடவுளின் ஆசிர்வாதங்கள் எங்கள் இருவர் மீதும் நம் வாழ்வில் முழுவதும் பொழியும். இந்த நாளிலிருந்து நல்லதோ, கெட்டதோ பணக்காரரோ, ஏழையோ, ஆரோக்கியம், மரணம் நம்மை பிரிக்கும் வரை அன்பு செலுத்தவும் போற்றவும் விரும்புகிறேன். இது என் வாழ்க்கையின் மிகவும் தெய்வீகமான அமானுஷ்யமான மற்றும் மறக்க முடியாத தருணம்.

television bablu prithiviraj

என் அன்பானவனே.. என் நண்பனே.. என் நலம் விரும்புவனே என்னுடைய மிகப்பெரிய ஆதரவை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். அதோடு அனைத்திற்கும் நன்றி ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று கடைசியில் முடித்திருக்கிறார்.

அதோடு சீத்தல் கல்யாணம் செய்த சுமேஷ் என்பவர் தடகள வீரராகவும், ஜிம் பயிற்சியாளராகவும் இருக்கிறார். அதுபோல 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடலமைப்பு ரவிவாஸ் கிளாசிக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். என்பிசி கர்நாடகா 2022 இல் நான்காவது இடத்தையும் பெற்று இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+