சர்ச்சையை தாண்டி பயில்வான் மகள் திருமணம்.. கலந்து கொண்ட பிரபலங்கள்! சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவு
சென்னை: நடிகர் பயில்வான் ரங்கநாதனின் மகள் திருமணம் சில தினங்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றிருக்கிறது. அப்போது அந்த திருமணத்தில் பிரபல நடிகராகவும் நாம் தமிழர் கட்சி தலைவராகவும் இருக்கும் சீமான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சிறகடிக்க ஆசை சீரியலில் மூலம் பிரபலமடைந்த நடிகர் பழனியப்பனும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை பழனியப்பன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷகிலாவும் பயில்வான் ரங்கநாதனும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது பயில்வான் குறித்து ஷகிலா பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்தார். அதனால் பயில்வான் ரங்கநாதன் மற்றும் ஷகிலா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் பற்றி பேசுகிறாரே, இவர் அந்த நடிகைகளை பக்கத்திலிருந்து பார்த்தாரா? என்று கேட்டிருந்தார்.

அதற்கு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பேச தான் செய்வோம் நான் நடிகைகளை பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. அந்த நடிகைகளே பேட்டியில் பேசியதை வைத்து தான் நான் பேசுகிறேன் என்று வாதிட்டு இருந்தார். அதற்கு ஷகிலா நீங்களும் புது வாழ்க்கையில்தானே இருக்கிறீர்கள். உங்களுடைய குடும்பத்தை பற்றி நான் பேசலாமா? உங்களுடைய மகள் இன்னொரு பெண்ணை காதலிக்கிறார், அது உங்களுக்கு தெரியுமா?
நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும்போது உங்கள் மகள் பைக்கில் நின்று கொண்டு இன்னொரு பெண்ணை காதலிப்பதை பேசிக்கொண்டிருந்தார். அதை நானே என்னுடைய காதால் கேட்டேன். நான் இதை எந்த இடத்திலாவது பேசி இருக்கிறேனா? என்று கேள்வி கேட்க, இதற்கு கோபப்பட்ட பயில்வான் ரங்கநாதன் என்னுடைய மகளைப் பற்றி பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று கண்டித்திருந்தார்.

இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சில தினங்களிலேயே தன்னுடைய மகளுக்கு எங்கேஜ்மென்ட் நடத்தி இருந்தார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். அதற்கு பிறகு வழக்கம்போல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும் போது பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பேசி இருந்தார்.
அதில் என்னுடைய மகளைப் பற்றி ஒரு நடிகை தகாத வார்த்தைகளை சொல்லிவிட்டார். அவருடைய பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை. இதனால் என்னுடைய குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டார்கள். இந்த சூழலில் என் சம்பந்தி திருமணத்தை சீக்கிரமாக முடித்து விடலாம் என்று சொன்னார்.
இதில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் சம்பந்தி வீட்டில் உள்ளவர்களும் கலந்து கொண்டு என்னுடைய மகளின் எங்கேஜ்மென்டை எளிமையாக முடித்து இருக்கிறோம். என்னுடைய மாப்பிள்ளை சிவா என்னுடைய மனைவியின் அண்ணனின் மகன் தான். ஏற்கனவே என்னுடைய மகளும் என்னுடைய மருமகனும் காதலித்து வந்தனர். அது தெரிந்து நாங்கள் திருமணத்திற்கு முடிவு செய்து இருக்கிறோம்.

என்னுடைய மருமகன் சிவா எம் பி ஏ படித்துள்ளார். என்னுடைய மகள் பி காம் படித்திருக்கிறார் இருவரும் ஐடியில் வேறு வேறு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு பிறகு பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணம் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்று இருக்கிறது.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான சீமான் உட்பட சிலர் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த திருமண பங்க்ஷனில் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பனும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதுபோல சீமான் கலந்து கொண்டு புகைப்படத்தை பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications