பிக் பாஸ்க்கு பிறகு வனிதாவிடம் பேசுறது கிடையாது.. லவ் டார்ச்சர் பண்றேன்னு போலீஸிடம்.. பாலாஜி எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடிகை வனிதாவிடம் பேசுவதில்லை என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு தான் கல்லூரி படிக்கும் போது தான் காதலித்த பெண் தன்னுடைய வீட்டில் தவறாக சொல்லிக் கொடுத்து அவர்கள் தன்னை பற்றி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவதாக மிரட்டியதாக பாலாஜி பேசி இருக்கிறார்.

பாலாஜி நடிப்பில் வா வரலாம் வா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேட்டியில் பாலாஜி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் புகழின் உச்சத்தில் வலம் வந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிலரை கூறலாம். அதில் ஒருவர் தான் பாலாஜி. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னராக தேர்வாகி இருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதில் வின்னராகவும் தேர்வாகி இருந்தார்.
பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையே நடந்த சண்டை சச்சரவுகள் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரில் யார் மீது தப்பு யார் செய்தது சரி என்ற விவாதம் பெரிய அளவில் அந்த காலகட்டத்தில் இணையத்தில் எழுந்து கொண்டிருந்தது. அதுவும் ஆரி மற்றும் பாலா ரசிகர்கள் விஜய் அஜித் ரசிகர்களை போன்று கடுமையாக கருத்து மோதல்களில் மோதிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அந்த நிலையில் இப்போது பாலாஜி வா வரலாம் வா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவரிடம் வனிதாவிடம் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறீர்களா? பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதாவிடம் பேசுவதற்கு பலரும் பயந்தாலும் நீங்கள் வனிதாவிடம் எதற்கும் பயப்படாமல் தைரியமாக பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு பாலாஜி நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவிடம் பேசுவது கிடையாது. எல்லாம் பயம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது என்று சிரித்தபடியே கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான கதையையும் பாலாஜி பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன்.
அந்த பெண்ணும் என்னை காதலித்தது. இருவரும் நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சில நாட்களாக அந்த பொண்ணு என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதனால் நான் ஒரு நாள் அவருடைய வீட்டிற்கு போய் அவருடைய அம்மாவிடம் பேசினேன். ஏற்கனவே அந்த பொண்ணோட அம்மாவை எனக்கு நன்றாக தெரியும்.
அதனால் எதார்த்தமாக அந்த பக்கமாக வந்தது போல அவரிடம் அந்த காதலித்த பெண்ணின் பெயரை சொல்லி அவள் இருக்கிறாளா எங்கே என்று விசாரித்தேன். அப்போது அவள் வெளியே போயிருக்கா என்று சொன்னார். பிறகு நான் அவரிடம் வந்தால் எனக்கு போன் பண்ண சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
ஆனால் அடுத்த நாளே எனக்கு போன் வருகிறது. நீ என் பொண்ணுக்கு லவ் டார்ச்சர் பண்றியான்னு கேட்கிறாங்க. அப்புறம் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்னு மிரட்டுனாங்க. எனக்கு அது ரொம்ப ஷாக்கா இருந்தது. நாங்க ரெண்டு பேருமே அந்த நேரத்தில் காதலிச்சிட்டு இருந்தோம். அப்புறம் எதுக்கு அந்த பொண்ணு வீட்டில நான் மட்டும் அந்த பொண்ணை அவள லவ் டார்ச்சர் பண்றேன்னு சொன்னான்னு தெரியல.
இந்த மாதிரி நிறைய பசங்க வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இருக்காங்க. இதுபோல பலர் ஏமாற்றமும் படுறாங்க. எந்த இடத்திலும் பெண்களுக்குத்தான் சப்போர்ட் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆண்களுக்கு பிரச்சனைகள் இல்லாமலா இருக்கிறது? மீ டூ பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இருக்கிறது என்று அந்த பேட்டியில் எமோஷனலாக பாலா பேசியிருக்கிறார்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications