பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணமா? மணப்பெண் யார்? அவரே வெளியிட்ட புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலாஜி முருகதாஸ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் திருமணத்தில் தன்னோடு இருக்கும் பெண் யார் என்பதை பாலாஜி முருகதாஸ் காட்டாமல் மறைத்திருக்கிறார். இதனால் பாலாஜி முருகதாஸுக்கு உண்மையில் திருமணம் முடிந்து விட்டதா! அல்லது இது திரைப்பட சூட்டிங் புகைப்படங்களா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதற்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸுக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது ஆரியோடு இவருக்கு ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் பெரிய அளவில் பேசப்பட்டது. வார நாட்களில் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சனிக்கிழமை எபிசோடில் மன்னிப்பு மோடுக்கு போய் சாந்த சொரூபமாக பாலாஜி மாறிவிடுவார். இது அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.
அதனாலேயே பிக் பாஸ் ரன்னராக அந்த சீசனில் அவர் தேர்வானார். அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் வெற்றி பெற்றுவிட்டார். இப்போது ஒரு சில திரைப்படங்களில் பாலாஜி முருகதாஸ் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆன நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண கோலத்தில் மணமேடையில் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதோடு பக்கத்தில் இருக்கும் மணப்பெண் முகத்தை முழுமையாக தெரியாதபடிக்கு மறைத்து இருக்கிறார் இதனால் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என்று ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் தற்போது பல திரை பிரபலங்கள் திடீர் திருமணங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் பாலாஜி முருகதாஸ் இடம் பிடித்து விட்டாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி என்பதால் ஏப்ரல் ஃபூல் பண்ணுவதற்காக இவர் இப்படி புகைப்படங்கள் போட்டு இருக்கிறாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதுபோல இது சூட்டிங் போட்டோவா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் இருக்கும்போது ஷிவானி உடன் அதிகமாக நெருக்கமாக இருந்ததால் ஷிவானியின் நிலைமை இனி அவ்வளவுதானா? என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் இது என்ன மாதிரி புகைப்படம் என்பதை பாலாஜி முருகதாஸ் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications