மன உளைச்சல், தற்கொலை முயற்சி! மீண்டும் வந்தது இப்படிதான்! கண்ணீரில் நடிகர் பெசன்ட் ரவி
சென்னை: வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவரும் நடிகர் பெசன்ட் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் தான் மன உளைச்சலால் தற்கொலை முயற்சி செய்தது குறித்தும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலரை வெளியே பார்க்கும் போது பார்ப்பதற்கே பயமுறுத்தும் வகையில் மிரட்டலாக இருப்பார்கள். இவங்க திமிரு புடிச்சவங்க போல இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் பழகி பார்த்த பிறகு இவரையா நாம இப்படி நினைத்தோம் இவ்வளவு குழந்தையாக இருக்கிறாரே என்று சொல்லத் தோன்றும். அதுபோல ஒருவர் தான் நடிகர் பெசன்ட் ரவி. வில்லனாக பலரையும் அடித்து துவம்சம் செய்யும் கேரக்டரில் மிரட்டிக் கொண்டிருக்கும் பெசன்ட் ரவி மனதளவில் வலிமையாக இருந்தாலும் சில ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக பேசி இருக்கிறார்.

நடிகர் பெசன்ட் ரவி பேட்டி
பெசன்ட் ரவி மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெசன்ட் ரவி தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத உணர்வு புரியும் பல விஷயங்களை பதிந்து பேசி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பெசன்ட் ரவி பேசும்போது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னுடைய எனக்கு சில வருடங்களுக்கு முன்பு Anxiety Disorder இருந்தது என்று கூறி இருக்கிறார்.
காப்பாற்றியது மனைவி
அதோடு அந்த நோயால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் பெசன்ட் ரவி பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று கூட நினைக்கும் தருணமும் வந்தது. ஆனால் என்னுடைய மனைவி தான் என்னை குழந்தை போல பார்த்தாங்க. அதனால் தான் நான் இன்று உயிருடன் நன்றாக இருக்கிறேன். அதனால் என்னுடைய மனைவி என்ன கேட்டாலும் நான் வாங்கி தர வேண்டும் அவரை சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு வந்தது என்று எமோஷனல் ஆகி இருக்கிறார்.
மாறாத காதல்
மேலும் அவர் பேசும் போது எங்களுக்கு திருமணம் நடக்கும் போது எனக்கு 22 வயது தான் என் மனைவிக்கு 16 வயசு தான் என்று பேசி இருந்தார். அதை தொடர்ந்து அவருடைய மனைவி பேசும்போது ரவி எனக்காக பல விஷயங்கள் செய்திருக்கிறார். ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கும் ரவிக்கு கோபம் வந்துடும் அதுதான் எனக்கு பிடிக்காது என்று சிரித்தப்படியே சொல்லியிருந்தார். பெசன்ட் ரவி மற்றும் அவருடைய மனைவி இருவரும் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலர் இதுதான் உண்மையான காதல், ஒருவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போது அவர் மீது வருவது மட்டும் காதலும் மரியாதையும் அல்ல அவர் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் போது உறுதுணையாய் இருந்து அவரை மேலே கொண்டு வருவது தான் காதல் அதை ரவியின் மனைவி செய்திருக்கிறார் என்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சர்வைவர் நிகழ்ச்சி
பெசன்ட் ரவி சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் நடித்திருக்கிறார். அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக நாட்கள் தாக்குப்பிடித்து இருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து பல இடங்களில் பெருமையாக பேசி இருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications