42 வயதில் ஒரு பெண்ணால் வாழ்க்கையில் மாற்றம் வரும்னு சொன்னாங்க! அது ராதிகா தான்! நடிகர் பாபூஸ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு ஜாதகம் பார்க்கும்போது, 42 வயதில், ஒரு பெண்ணால் உங்களுடைய வாழ்க்கை மாறும் என்று கணித்தார்கள். அந்த கணிப்புப்படி, ராதிகாவால் தான் என்னுடைய வாழ்க்கை மாறியது" என்று பேசியிருக்கிறார் நடிகர் பாபூஸ்.

நடிகர் பாபூஸ் சீரியல்களில் தன்னுடைய நடிப்பை தொடங்கி சினிமாக்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிகமான சீரியல்களில் வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அரசி, செல்வி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் ராதிகாவோடு நடித்து அதற்கு பிறகு இப்போது அதிகமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாபூஸ் ராதிகா பற்றி பேசி இருக்கிறார்.

radhika sarathkumar

அதில் பாபூஸ் பேசுகையில் என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு ஜோதிடரிடம் என்னை கூட்டிக்கொண்டு போனார். நானும் நடிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்திருந்தேன் ஆனால் எதுவும் பலன் அளிக்காததால் அந்த ஜோதிடர் தான் என்னதான் சொல்லப் போகிறார் என்று கேட்கலாம் என போனோம்.

அங்கு அதிகமானோர் காத்து இருந்தனர். நான் அங்கிருந்த ஜோதிடரை பார்த்தேன் அவர் ஜிப்பாய் போட்டுக்கொண்டு இருந்தார். அவர் என்னை கடந்து போகும் போது என் மனதிற்குள் இவரெல்லாம் சொல்லி நமக்கு நடக்க போகுதா என்று நினைத்தேன். பிறகு அவரிடம் நான் போகும் போது இவன் எல்லாம் சொல்லி என்ன நடக்கப் போகிறது என்று தானே நினைச்சீங்க? என்று கேட்டார்.

நான் ஆடிப் போய்விட்டேன் பிறகு நீங்க எதுக்காக வந்தீங்க என்று கேட்டார். அப்போது சினிமாவில் எனக்கு எதிர்காலம் இருக்கா? இல்லையா? நான் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்று தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நீங்க செருப்பால அடிச்சா கூட சினிமாவை விட்டு போக மாட்டீங்க, உங்க பேர்ல ஸ்டுடியோ எல்லாம் வரும்.

சினிமாவில் நீங்க ஒரு அடையாளம் என்று சொன்னார். அதோடு உங்களுடைய ஆசை என்ன என்று என்னிடம் கேட்டார். அப்போ நான் பிறக்கும்போது யாருக்கும் தெரியாது சாகும்போது ஒரு அடையாளம் இருக்க வேண்டும், செய்தி சேனல்களில் தலைப்பு செய்தியில் என்னுடைய சாவு செய்தி வரவேண்டும் என்று சொன்னேன். அது நிறைவேறும் போங்க என்று சொன்னார்.

அன்று மட்டும் நான் அவரை பார்க்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி என்னுடைய அப்பா செய்த வேலையை பார்க்க போயிருப்பேன். என்னுடைய அப்பா ஒரு பெயிண்ட் கடை வைத்திருந்தார் அங்கு போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த ஜோதிடரை சந்தித்தேன்.

அதுபோல சில வருடங்கள் கழித்து இன்னொரு ஜோதிடரை பார்த்தேன் அவரிடம் என்னுடைய 42வது வயதில் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு பொண்ணு வரும் அந்தப் பெண்ணால் உன்னுடைய வாழ்க்கையே மாறும் என்று சொன்னார். ஆனால் அப்படி எந்த பெண்ணும் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவில்லையே என்று கேட்டேன்.

அதற்கு அவர் நீங்க சீரியலில் ஹிட் ஆனீங்க? என்று கேட்டார். நான் செல்வி சீரியல் என்று சொன்னேன். அப்போ உங்க வயசு என்ன என்றால் 42 வயது என்று சொன்னேன். செல்வி சீரியல் பெண் பெயர்... அந்த சீரியலை இயக்கி நடித்தது ராதிகா அவங்க தான் உங்களுக்கு வாய்ப்புக் தந்தது. அப்போ கூட்டி கழிச்சு பாருங்க என்று சொன்னார். அதற்கு பிறகு தான் எனக்கே உண்மை புரிந்தது. ஆமாம் என்னுடைய வாழ்க்கை ராதிகாவால் தான் மாறியது என்று புரிந்தது என அந்த பேட்டியில் பாபூஸ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+