நல்ல முஸ்லிம்னா இப்படித்தான்..! “அந்த” கதையை சொல்லி விளக்கம் கொடுத்த நடிகர் பாக்கியராஜ்
சென்னை: நடிகர் பாக்கியராஜ் பேட்டி ஒன்றில் நல்ல முஸ்லிம் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கதை மூலம் விவரித்து பேசி இருக்கிறார்.
பாக்யராஜ் சொன்ன கதையை கேட்டு அதிகமான ரசிகர்கள் பாக்யராஜை பாராட்டி வருகின்றனர்.

தற்போது பாக்யராஜ் பேசிய வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அதில் அவர் என்ன கதை சொன்னார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முன்னணி இயக்குனராகவும் திரைப்பட நடிகராகவும் இருந்து வரும் நடிகர் பாக்யராஜ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார். அதில் தன்னோடு நடித்த பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய திரை அனுபவங்கள் வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பாக்கியராஜ் பதில் அளித்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் பார்த்த வித்தியாசமான ஒன்று என்றால் என்ன என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு பாக்கியராஜ், மும்பையில் இந்து முஸ்லிம் கலவரம் அப்பப்ப நடந்துகிட்டு இருக்கும். அப்போ ஒரு நபர் தமிழ்நாடு பற்றி ஒரு மீட்டிங்கில் பேசுவதற்காக மும்பைக்கு போயிருக்கிறார். போயிட்டு மீட்டிங் முடிச்சுட்டு நைட்டு வரும்போது அவருக்கு லேட் ஆகிவிட்டது. அப்போது அவர் ஒவ்வொரு டாக்ஸியாக நிறுத்தி இருக்கிறார். எல்லோருமே வேண்டாம் கலவரமா இருக்கு நாங்க வரல என்று போயிருக்காங்க.

அந்த நேரத்துல ஒரு டாக்ஸி வந்திருக்கிறது. அதை நிறுத்தி அந்த மனிதர் பரிதாபமாக கையெடுத்து கும்பிட்டு, யப்பா உன்னை பார்த்தா இந்து மாதிரி இருக்கு. நானும் ஒரு இந்து. இந்துக்கு இந்து ஹெல்ப் பண்ண கூடாதா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த டாக்ஸி டிரைவரும் சரி சார் வாங்க என்று கூப்பிட்டு போய் இருக்கிறார் .பிறகு அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.
அப்போது அந்த நபர் பணத்தை டிரைவரிடம் கொடுத்திருக்கிறார். பிறகு அவர் புறப்படலாம் என்று கிளம்பும்போது அந்த டிரைவர் சார் என்று கூப்பிட்டு இருக்கிறார். நீங்க நினைக்க மாதிரி நான் இந்து கிடையாது. நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லி இருக்காரு. அதாவது ஒரு நல்ல முஸ்லிம் அடுத்தவங்க யாருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாதுன்னு எங்க குர்ஆன்ல சொல்லி இருக்கு. எல்லா மதங்களும் நல்ல மார்க்கத்தை தான் போதிக்கிறது. ஆனா நம்ம தான் மதத்தின் பெயரால் சண்டை போட்டுகிட்டு இருக்கோம் என்று கூறினார், என்று பாக்கியராஜ் கூறிய வீடியோவை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications