பிரண்ட்ஸ் படத்தின் "குட்டி விஜய்" பெசன்ட் நகரில் என்ன செய்றாரு பாருங்க! சிறு வயது கனவு நனவானதே!
சென்னை: பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறுவயது விஜயாக நடித்த பரத் ஜெயந்த் தற்போது பெசண்ட் நகர் கடற்கரையில் ஐஸ் விற்பனை செய்து வருகிறார்.
திரைத்துறைக்கு வரும் குழந்தை நட்சத்திரங்கள் பெரியவர்களாகி ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நடிக்கவும் செய்கிறார்கள். சிலர் பாதியிலேயே காணாமல் போகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், மாஸ்டர் மகேந்திரன், நடிகைகள் ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, மீனா, குஷ்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோ, ஹீரோயின்களால நடித்து நல்ல நிலையில் உள்ளனர்.
இவர்களில் மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். எனினும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த வகையில் சிறு வயது ஹீரோவாக நடித்தவர் பரத் ஜெயந்த். இவர் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்திருந்தார்.

வானத்தை போல
அது போல் வானத்தை போல எனும் விஜயகாந்த் படத்தில் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்திருப்பார். அதாவது சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் போது அவரின் சைக்கிள் பஞ்சராகிவிட்டதால் விஜயகாந்த், அவரை தன் தலை மேல் உட்கார வைத்து தூக்கிச் சென்று பள்ளிக்கு கூட்டிச் செல்வார். மேலும் சில திரைப்படங்களில் சிறுவனாக பரத் ஜெயந்த் நடித்துள்ளார்.

சன் டிவி
இவர் சன்டிவியில் ஒளிபரப்பான முதல் மெகா தொடரான வாரிசு என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பூம் பூம் ஷக்கலக்க உள்ளிட்ட சில சீரியல்களிலும் பரத் நடித்திருந்தார். எனினும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.

வேனை கடை போல் மாற்றி வியாபாரம்
ஒரு வேனை கடை போல் மாற்றி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் நிறைய பேர் பேட்டி எடுத்து வருகிறார்கள். அவர்களிடம் பரத் கூறுகையில் சிறு வயதில் பல படங்களில் நடித்துள்ளேன், சீரியல்களிலும் நடித்துள்ளேன். அப்போதெல்லாம் வெளியே சென்றால் மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள், பலர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். இப்படி சிறிய வயதிலேயே அனைத்து புகழையும் அடைந்துவிட்டேன்.

ஐஸ்கிரீம்
சிறு வயதில் ஒரு ஐஸ்கிரீம் கடை வைத்து அதில் உள்ள எல்லா ஐஸ்கிரீம்களையும் சுவைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அதுவே என் தொழிலாகிவிட்டது. என் கடைக்கு வரும் பலர் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். என்னிடம் பேசுவார்கள். சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. வாய்ப்பு கிடைக்க வில்லை என நான் சொல்ல மாட்டேன். நான் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை.

விஸ்காம் பட்டதாரி
ஆனால் என் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடை நான் இல்லாவிட்டாலும் இயங்கும் என்ற நிலை வர வேண்டும். அதற்கு இன்னும் சில காலம் ஆகும். அந்த காலம் வந்ததும் நான் நிச்சயம் சினிமாவில் நடிப்பேன் என்றார். இவர் விஸ்காம் பட்டதாரி. இவர் பிரியமான தோழி படத்திலும் நடித்துள்ளார். லயோலா கல்லூரியில் படித்த இவர் சில காலம் மாடலாகவும் வலம் வந்தார். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அதர்வா- நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். ஆனால் பிசினஸ் மீது இருந்த ஆர்வத்தால் அவர் அதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications