ஜீவா இப்ப வரைக்கும் எனக்கு மாசம் 15000 அனுப்பிட்டு இருக்காரு! காரணம் இதுதான்! பாவா லட்சுமணன் எமோஷனல்
சென்னை: நடிகர் பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் நடிகர் ஜீவா பல வருடங்களாகவே எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் இதுதான் என்று பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஒரு சில நடிகர்கள் கேமராவுக்கு பின்பு பல வேலைகளை செய்து இருப்பார்கள். ஆனால் அப்போதெல்லாம் அவர்களுக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்திருக்காது. ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் திடீரென்று கேமரா முன்பு அவர்கள் எதிர்பாராத விதத்தில் நடித்தது இப்ப வரைக்கும் பேசப்பட்டு வரும். அந்த மாதிரி தான் பாவா லட்சுமணன் வாழ்க்கையும் இருந்திருக்கிறது.

இவர் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பல வருடங்களாக வேலை செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் மாயி திரைப்படத்தில் இடம்பெற்ற வாமா மின்னல் டயலாக் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல வடிவேல் கூட்டணியில் இவரும் அதிகமாக நடித்து இருப்பார்.
அதிலும் ஆனந்தம்,வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி, கலகலப்பு போன்ற பல படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் எங்க வீட்டு மீனாட்சி சீரியலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பிறகு காலில் வந்த புண் காரணமாக ஒரு விரலை நீக்கி இருந்தனர்.
இப்போது அவருக்கு முன்பு போல சினிமாக்களில் அதிகமான வாய்ப்பு வரவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் தான் ஆரம்பகாலத்தில் சினிமாவில் பார்த்த விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த வரிசையில் நடிகர் ஜீவா தனக்கு இப்ப வரைக்கும் மாதா மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொண்டிருக்கிறார் என்பது குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது ஜீவா ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தார். சின்ன பையன் ஆகவே நான் பார்த்திருக்கிறேன். அப்ப இருந்து நான் அவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப தொடங்கினார் இப்ப வரைக்கும் அனுப்புகிறார்.
நான் கேட்டது கூட கிடையாது ஆனால் அவராகவே அனுப்பிவிடுவார். அதுபோல நான் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் போது ஆர்பி சவுத்ரி சார்தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து என்னுடைய மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார். நான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்க்கும் போது ஜீவா எல்கேஜி படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது இருந்து நான் அவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறேன். அதுபோல விசுவாசம் ஆக இருந்ததால் அவர் எனக்காக இவ்வளவு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று பாவா லட்சுமணன் பகிர்ந்திருக்கும் நிலையில் ஜீவாவின் குடும்பத்தின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications