விஜய் அரசியல் வருகையை அந்த படத்திலேயே சொல்லிட்டாரு! பல பேர் முன்பு சொன்ன வார்த்தை.. பாஸ்கி ஓப்பன்
சென்னை: தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் பாஸ்கி விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். விஜய் "தமிழன்" திரைப்படத்தில் நடிக்கும் போது தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்து இருக்கிறார் என்று பாஸ்கி சில தகவல்களையும் கூறி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கிரிக்கெட் வீரர், மேடைப் பச்சாளர் திரைப்பட நடிகர் என்று பல முகங்களை கொண்ட பாஸ்கி பல வருடங்கள் கழித்து சமீபத்தில் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். பாஸ்கி ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஹரி கிரி அசெம்பிளி என்ற நிகழ்ச்சியை ஆயிரம் எபிசோடுகள் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுபோல 18க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் சொல்லுங்க பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருடைய காமெடி பல மக்களை கவர்ந்திருக்கிறது அது மட்டும் அல்லாமல் பல பிரபலங்களை காமெடியாக கேள்வி கேட்டு அவர்களை கலாய்த்து எடுத்து அவர்கள் பற்றி பல விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.
அதனால் இவருடைய இன்டர்வியூ என்றாலே சிலர் கலந்து கொள்வதற்கு பயப்படுவார்கள். ஒரு சிலர் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமும் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனியார் சேனல் ஒன்றியத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், விஜய் அவர் நடித்த தமிழன் திரைப்படத்திலேயே அரசியலுக்கு வரப்போவதை காட்டிவிட்டார்.
அந்த திரைப்படத்தில் பல புள்ளி வர விவரங்களை பேசி இருப்பார். அது குறித்து அந்த திரைப்படம் வெளியான பிறகு நான் அவரிடமே கேட்டேன், நீங்கள் எதுவும் அரசியலுக்கு வர போறீங்களா? இவ்வளவு நடிச்சு இருக்கீங்க உங்களுடைய வழக்கமான காமெடி இந்த படத்தில் மிஸ் ஆகிவிட்டது. படத்தில் முழுக்க நீங்க அரசியல் பேசி இருக்கீங்களே என்று கேட்க அதற்கு விஜய் சிரித்துக் கொண்டே என்னுடைய நண்பர்கள் இது போலத்தான் ரெண்டு பேர் சொல்லிட்டு இருக்காங்க என்று பேசியிருந்தார்.
நான் அவருடைய முகத்துக்கு நேராகவே அவர் பற்றி நெகட்டிவாக பேசினேன் ஆனால் அவர் அதை கேட்டு கோபப்படவில்லை. அதுபோல நான் அவரை முதல் முறையாக யூத் திரைப்பட சூட்டிங்கில் தான் பார்த்தேன். யூத் மற்றும் தமிழன் இரண்டு திரைப்படமே ஒரே வருடத்தில் தான் வெளியானது. அதுபோல அந்த நேரத்தில் நான் ஹரி கிரி அசெம்பிளி நிகழ்ச்சியை நடத்தி இருந்ததை பார்த்து யூத் படத்தின் இயக்குனர் என்னை விஜய் படத்தில் நீங்க நடிக்கிறீங்களா என்று கேட்டார்.
நானும் சரி என்று சொல்லி இருந்தேன். பிறகு சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக மாயாஜாலாவிற்கு போயிருந்தேன். அந்த நேரத்தில் நான் ஹரி கிரி அசெம்பிளி நிகழ்ச்சியில் பல பிரபலங்களை கிண்டல் செய்திருந்ததால் யாருமே என்னிடம் வரவில்லை. இவன்கிட்ட போய் நமக்கு என்ன வேலை என்று எல்லாரும் ஒதுங்கி போயிருந்தார்கள். நான் தனியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தேன். அப்போது விஜய் எக்ஸ்லேட்டரில் ஹீரோயினியோட இறங்கி வர சீன் எடுக்குறாங்க.
அப்போ அதிகமான மக்கள் அவரை பாத்துட்டு இருக்காங்க. அவரு ஹீரோயினியோடு பேசிகிட்டு வர்ற காட்சிகள் எடுத்துட்டு இருந்தாங்க. அப்போ அங்கிருந்த கூட்டத்தை தாண்டி விஜய் என்னை பார்த்து கை காட்டினார். நானும் நமக்கு பின்னாடி யாராவது இருக்காங்களா என்று திரும்பிப் பார்த்தேன். அவர் உங்களை தான் என்று சொன்னார். பிறகு ஷார்ட் முடிந்து அந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு நேரா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
அப்போது சார் உங்களுக்கு எங்க அம்மா ரசிகர். நீங்க எல்லாரையும் நல்லா பேட்டி எடுக்குறீங்க என்று சொன்னார். நானும் உடனே அவரிடம் அப்போ நீங்களும் பேட்டிக்கு வரீங்களா சார் என்று கேட்க, நான் அவர் சிரித்து விட்டார். நான் சும்மாவே பேட்டிக்கு போக மாட்டேன் நீங்க இவ்வளவு கலாய்க்கிறீங்க உங்க பேட்டிக்கு வரவே மாட்டேன் என்று சிரித்துக் கொண்டு சொன்னார். எனக்கு விஜயை பார்க்கும்போதெல்லாம் இவர் மட்டும் எப்படித்தான் இவ்வளவு சிம்பிளா இருக்கிறாரோ என்று தோணும்.
நானும் அவரோடு சில படங்களில் நடித்து இருக்கிறேன். அவருடைய சிம்ப்ளிசிட்டி என்னை ரொம்பவே அவரை ரசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் இன்று அரசியலுக்கு வந்திருப்பது அவர் பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு தான் என்று அந்த பேட்டியில் நடிகர் பாஸ்கி கூறியிருக்கிறார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications