ஆணுறுப்பில் வெளியேறும் மாதவிடாய்,விந்து.. பிரபல நடிகரின் வேதனை.. இடுப்புக்கு மேலே ஆண், கீழே பெண்
சென்னை: பிரபல நடிகராகவும் தொகுப்பாளராகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கும் சக்கரவர்த்தி என்பவர் தான் சமீபத்தில் தமிழக அரசால் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழ் பெற்று இருக்கிறார்.
பத்து வயதிலே தன்னுடைய உடம்பில் ஏற்பட்ட வித்தியாசத்தை பார்த்து பயந்து போன சக்கரவர்த்தியில் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வந்திருக்கிறது.

ஒரே உடம்பில் ஆண் ஆகவும் பெண்ணாகவும் வேதனையை சுமந்து கொண்டிருக்கும் நடிகர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஆயிரத்தில் ஒருவருக்கு தான் ஒரு சில பிரச்சனைகள் அரிதாக காணப்படும். அந்த மாதிரி ஒரு நபர்தான் நடிகர் சக்கரவர்த்தி. இவர் சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
ஆனால் பத்தரை வயதாக இருக்கும் போதே சக்கரவர்த்தியின் உடலில் மாற்றம் வர தொடங்கி இருக்கிறது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதை தன்னுடைய அம்மாவிடம் சொன்ன சக்கரவர்த்திக்கு அவருடைய அம்மா ஏதாவது அடிபட்டு இருக்கும் என்று சொல்லி ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால் பிறகு அது தொடர்ந்து கொண்டிருந்ததால் மருத்துவரிடம் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது மருத்துவர் அவரை செக் பண்ணி பார்த்துவிட்டு உங்களுக்கு கர்ப்பபை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதனால் பெண்ணாகத்தான் இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொல்லி அனுப்பி இருக்கின்றனர். பிறகு சில வருடங்கள் கழித்து அவருடைய ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியாகியிருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருக்கு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் விஷயமே தெரிந்திருக்கிறது. இதை தெரிந்து கொண்ட இவருடைய பள்ளியில் படிக்கும் நண்பர்கள் கூட பலர் இவரிடம் தப்பாக நடப்பதற்கு முயற்சி செய்து கிண்டல் செய்து அவமானப்படுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சக்கரவர்த்தியின் அம்மா உனக்கு திருமணம் செய்து வைத்தாலும் அது சரிப்பட்டு வராது ஒரு ஆணை திருமணம் செய்தாலும் அதுவும் முடியாது. பெண்ணையும் திருமணம் செய்ய முடியாது என்று அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து யோசித்துக் கூறியிருக்கிறார். பிறகு ஒவ்வொரு மாதமும் ஆணுறுப்பின் வழியாகவே சிறுநீரும் வெளியே வருகிறது. அதே வழியாக மாதவிடாயும் வெளியேறுவதால் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் கர்ப்பபையை ஆபரேஷன் செய்து எடுத்து இருக்கின்றனர்.
ஆனாலும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு வந்து விடக்கூடாது என்று இவருடைய ஆணுறுப்பை ஆப்ரேஷன் செய்து அகற்றி விட்டார்களாம். அதற்குப் பிறகு பல வருடங்களாக தன் வேதனையை அனுபவிக்க வந்த சக்கரவர்த்தி தன்னைப் போல இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். பல பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். இதனால் இவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம்.
தொகுப்பாளராகவும் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு நடிகராகவும் வாய்ப்பு கிடைக்காமல் தான் இப்போது கஷ்டப்படுவதாக பேட்டி ஒன்றில் சக்கரவர்த்தி பேசி இருக்கிறார். அவருடைய வேதனைக்கு பலர் தொடர்ச்சியாக இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் இவருக்கு தமிழக அரசு சார்பாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் பலர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications