4 வயசுல அந்த உண்மை தெரிஞ்சு துடிச்சிட்டான்! கமலுக்காக தான் கல்யாணம்.. அண்ணன் இல்ல அப்பா- சாருஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கின்றனர். அதில் தாங்கள் கமல்ஹாசனுகாகத்தான் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு கமல்ஹாசனுக்கு நான்கு வயதாக இருக்கும் போது தன்னைப் பற்றிய ரகசியம் தெரிந்ததால் கமல்ஹாசன் கதறி அழுதார் என்றும் சாருஹாசனின் மனைவி கூறியிருக்கிறார்.
அதுபோல நடிகர் கமல்ஹாசன் எந்த மேடைகளில் பேசும்போதும் தன்னுடைய அண்ணன் சாருஹாசன் எப்போதுமே எனக்கு அப்பா தான் என்று பேசி இருக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக கமல்ஹாசனின் அண்ணனும் அவருடைய மனைவியும் கொடுத்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசனுக்கு இப்போது 93 வயது ஆகிறது. அவருடைய மனைவி கோமளவள்ளிக்கு 83 வயது ஆகிறதாம். ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது சாருஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு முடிவில் இருந்தாராம். அதற்கு காரணம் இப்போது இந்தியாவில் அதிகமான மக்கள் தொகை இருக்கிறது.

அதில் நாமும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டால் குடும்பம் பெருசாகிக்கொண்டே போகும் எதற்கு இந்த திருமணம் என்று அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் சாருஹாசனின் அம்மா கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவருக்கு திடீரென்று பயம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும் அதனால் நீ திருமணம் செய்து கொள் என்று சாருஹாசனிடம் சொல்லி இருக்கிறார்.
முதலில் சாருஹாசன் திருமணம் செய்ய மறுத்தாலும் பிறகு சரி என்று சொல்லிவிட்டாராம். சாருஹாசன் அந்த நேரத்தில் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். அப்போதுதான் சாருஹாசன் வீட்டில் கோமளவள்ளியை பார்த்து இருக்கிறார்கள். கோமளவள்ளிக்கு அந்த நேரத்தில் 19 வயது தானாம். அவருக்கும் பெரிய அளவில் திருமணம் செய்து கொள்ள ஆசை இல்லையாம்.
ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் கமல் சாருஹாசன் அம்மாவிற்கு பிறந்திருக்கிறார். கமல்ஹாசனை முழுமையாக கோமளவள்ளி தான் வளர்த்திருக்கிறார். நான்கு வயது வரைக்கும் கமல்ஹாசன் கோமளவள்ளியை அம்மா என்று கூப்பிடுவாராம். அப்போது கமல்ஹாசன் அம்மாவும் நீ அவனிடம் உண்மையை சொல்ல வேண்டாம்.
அவன் உன்னை அம்மாவாக நினைக்கிறேன் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம். ஆனால் வீட்டில் வேலை செய்தவர்கள் கமல்ஹாசனுக்கு நான்கு வயதாக இருக்கும்போது உண்மையை சொல்லி இருக்கிறார்கள். அதை தெரிந்ததும் கமல்ஹாசன் ஒரு நாள் முழுக்க இருந்து அழுது கொண்டே இருந்தாராம். அந்த நாளை மறக்கவே முடியாது என்று கோமளவள்ளி கூறி இருக்கிறார்.

அதோடு சாருஹாசனும் எனக்கு என்னுடைய தம்பி கமல்ஹாசன் என்பது பலமுறை மறந்துவிடும் அவனை என்னுடைய மகனாகத்தான் நானும் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். அதுபோல கோமளவள்ளி பேசுகையில் என்னுடைய கணவரின் இன்னொரு தம்பி சந்திரஹாசன் தான் எனக்கு குடும்பத்திலேயே நெருங்கிய நண்பர். என்னுடைய குழந்தைகள் மரியாதையாக இருப்பதற்கு காரணம் அவர்தான்.
அதுபோல சுஹாசினி என் குழந்தைகளை நன்றாகவே பார்த்துக் கொண்டாள். சுஹாசினியும் என் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார் என்று அந்த பேட்டியில் சாருஹாசன் மற்றும் அவருடைய மனைவி பேசியிருக்கிறார்கள்.
-
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications