ஏழை குடிசையில் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்.. நரிக்குறவர்கள் கொடுத்த பரிசு.. வியக்க வைத்த எளிமை
சென்னை: நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியளராக இருக்கும் நிலையில் இன்று நரிக்குறவர் மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்திருக்கும் நிலையில் நரிக்குறவர் மக்கள் அவருக்கு பாசி மணிகளால் ஆன மாலையை பரிசாக கொடுத்திருக்கின்றனர். அப்போது ஸ்ருதன் ஜெய் நாராயணன் நடந்து கொண்ட இடம் குறித்து இணையத்தில் பலரும் அவரை அவரை பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் சின்னி ஜெயந்த் 1980 ஆம் ஆண்டு முதல் 1990களில் ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு வருவதற்காக கிருஷ்ணமூர்த்தி நாராயணன் என்ற தன்னுடைய பெயரை இவர் சின்னி ஜெயந்த் என்று மாற்றி இருந்த நிலையில் டைரக்டர் ஆகவும் தயாரிப்பாளர், காமெடி நடிகர், மிமிக்ரி கலைஞர் என்று பல திறமைகளை கொண்டு பல படங்களில் கதாநாயகனின் நண்பனாக நடித்து பலருக்கும் பரிச்சயமாகி இருக்கிறார்.

அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்னி ஜெயந்த் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னி ஜெயந்த் இரு திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் பெருமையும் இவருக்கு இவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கொடுத்திருக்கிறார்.
அப்படி என்னதான் அவருடைய மகன் பெருமை சேர்த்தார் என்றால் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் 2019 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி அதில் நாட்டிலேயே 75 வது ரேங்க் வாங்கியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வு வெற்றி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றி இருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. ஸ்ருதன் ஜெய் நாராயணன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு தான் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் இன்று தன்னுடைய பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களின் குறைகளை அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்று கேட்டு அறிந்திருக்கிறார். அதோடு வீட்டுமனை பட்டா இல்லாத ஏழு குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி இருக்கிறார்.

அதுபோல ஏற்கனவே பட்டா வைத்திருந்தவர்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இணைந்து வீடு கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நரிக்குறவர் மக்களின் குழந்தைகள் ஸ்கூலுக்கு ஒழுங்கா போறாங்களா? அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்டு அறிந்திருக்கிறார்.
அப்போது அங்கு உள்ள மக்கள் பலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அவரிடம் மனு கொடுத்து இருந்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அப்போது அங்கிருக்கும் பெண்களில் ஒரு சிலர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு தங்கள் கையால் செய்யப்பட்ட பாசி மாலைகளை கழுத்தில் அணிவித்திருக்கிறார்கள்.
தான் பதவியேற்ற பிறகு ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடர்ச்சியாக பல ஏழைகளுக்கு உதவி வரும் நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள் நடிகரின் மகன் நடிகராக ஆசைப்படாமல் படித்து கலெக்டர் ஆகி பல பேருக்கு உதவி செய்து வரும் ஸ்ருதன் ஜெய் நாராயணனை பலரும் பாராட்டி வருகிறார்கள்
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications