ரவி மோகன், கெனிஷா உடன் போட்டோ.. அந்த பொண்ணு போன் செய்து திட்டுது.. வெளியே தெரியாத பிரச்சனை- கூல் சுரேஷ்
சென்னை: நடிகர் கூல் சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண பங்க்ஷனில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரையும் தான் சந்தித்ததாகவும் அப்போது எடுத்த புகைப்படத்தால் தனக்கு வந்த மிரட்டல் குறித்து கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் பலருக்கும் பரீட்சையமான கூல் சுரேஷ் இன்று நடிகர் ரவி மோகன் குடும்ப விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். கூல் சுரேஷ் காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் சமீபத்தில் சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியாகும் போது வித்தியாசமான உடை அணிந்து கொண்டு அந்த திரைப்படத்திற்கு வித்தியாசமாக புரமோஷன் செய்து கொண்டிருக்கிறார். இவரை திரைப்படங்களில் கவனிக்காதவர்கள் கூட இப்போது இவர் படத்திற்கு பிரமோஷன் செய்வதை வைத்து இவரை ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூல் சுரேஷை திட்டிய பெண்
இந்த நிலையில் இன்று அவர் நடிகர் ரவி மோகன் குடும்ப விஷயம் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜெயம் ரவி (ரவி மோகன்) உடன் கெனிஷாவும் வந்திருந்தாங்க. அவங்க என்னை பார்த்து பேசுனாங்க. அப்போ கூட ரவி மோகன் என்கிட்ட என்ன கூல் இப்போ உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டா மாறிட்ட, கதாநாயகனா நடிக்க போறியா என்று பேசினாரு, நானும் அவரிடம் பேசினேன். பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அவ்வளவுதான் நடந்தது.
மிரட்டல் போன் கால்
அதற்காக அன்று இரவு எனக்கு ஒரு பொண்ணு போன் பண்ணி என்னை திட்டுது. ரவி மோகன் ரொம்ப நல்லவருனு நினைச்சேன் ஆனா அவரு இப்போ இப்படி மாறி இருக்கிறார், அவர் கூட போய் நீங்க பேசுறீங்களே? ஆர்த்திக்கு நீங்க துரோகம் பண்ணுறீங்க! ஆர்த்தி உடைய வாழ்க்கை இப்போ கேள்விக்குறியா இருக்கு நீங்க ரவி மோகன் கூட பேசுறீங்க என்றெல்லாம் திட்டுறாங்க. நான் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் இருவருடைய குடும்ப பிரச்சனையில் தலையிடுவது சரி அல்ல, அதில் பெற்றோர் கூட தலையிடக்கூடாது.
மிரட்டல் மெசேஜ்
நாம அட்வைஸ் பண்ணுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று அவர்களுக்கு தான் தெரியும். அதனால் அதில் நாம் தலையிடக்கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் அந்த பெண் என்னை கேட்காமல் நீங்க ரவி மோகன் நம்பர் தாங்க, ஆர்த்தி மேடம் நம்பர் தாங்க என்றெல்லாம் என்கிட்ட பேசுது. நான் அந்த நம்பரை பிளாக் பண்ணிட்டேன் ஆனாலும் வாட்ஸ் அப்பில் என்ன மிரட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டே இருக்காங்க. ரவி மோகன் கெனிஷா இருவரும் நண்பர்களாக பழகுறார்களா? அல்லது வேறு விதமா என்று நமக்கு தெரியாது. அது அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கை, அதை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் நாம் தலையிட்டு அட்வைஸ் செய்வது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை.
தவறு வெளியே தெரியாது
சிலர் அவருடைய புகைப்படம் வெளியானதிலிருந்து இப்படித்தான் தவறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனையை அவர்களே பேசித் தீர்ந்து கொள்ளட்டும். நாம் அதை பெரிதாக ஆக்காமல் விட்டு விடுவது தான் சிறப்பு. நான் இதில் யாரு தப்பு சொல்லவில்லை. இதில் உண்மையான தப்பு ரவி மோகன் மீது இருக்கிறதா? அல்லது ஆர்த்தி மேடம் மீது இருக்கிறதா? என்று எதுவும் நமக்கு தெரியாது. நான் தெரியாமல் இவங்க இப்படித்தான் என்று வெளித்தோற்றத்தை வைத்து மட்டும் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் எல்லோரும் அட்வைஸ் செய்ய வேண்டும் என்று மக்கள் நினைப்பதும் தவறு என்று நினைக்கிறேன் என கூல் சுரேஷ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications