சித்தி சீரியல் பெயரால் பட்ட அவஸ்தை.. போனில் மிரட்டிய இயக்குனர்.. “டேனியல்” பாலாஜி ரகசியம்
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு கொண்டு போயிருந்த நிலையில் அவர் காலமாகி இருந்தார். இது அவருடைய ரசிகர்களையும் நண்பர்களையும் பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் டேனியல் பாலாஜி பேசிய பழைய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் டேனியல் பாலாஜி வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தாலும் இவர் முதன் முதலில் வில்லனாக அறிமுகமானது சின்னத்திரையில் தான். அதுவும் ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "சித்தி" சீரியலில் இவர் "டேனியல்" என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் வில்லனாக இவர் அறிமுகம் ஆகும் காட்சிகள் வேற லெவலில் இருக்கும்.

"டேனியல் பாலாஜி" "வேட்டையாடு விளையாடு" திரைப்படத்தில் "அமுதன்" கேரக்டரில் மிரட்டி இருப்பது போலவே பல வருடங்களுக்கு முன்பே சித்தி சீரியலிலும் நடித்து இருப்பார். அந்த சீரியலில் நீண்ட தலைமுடி அதுவும் சீவப்படாமல் கலைந்திருக்கும்.. எப்போதும் கையில் ஒரு சிகரெட், கண்களில் ஒரு கோபம் என வில்லனாகவே அந்த சீரியலில் டேனியல் பாலாஜி நடித்து மிரட்டி இருந்தார்.
90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பேவரைட் ஆன அந்த சீரியலில் டேனியல் பாலாஜியின் நடிப்பு பலரையும் மிரட்டி இருக்கும். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் சீரியலில் அவர் நடித்த டேனியல் என்ற பெயர்தான் அவருடைய நிஜப் பெயரோடு ஒட்டிக்கொண்டது. ஆமாங்க டேனியல் பாலாஜியின் நிஜ பெயர் பாலாஜி தான். முதல் சீரியலில் அவர் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால் அவரை வெளியே போகும் இடங்களில் எல்லாம் எல்லோரும் டேனியல் என்று கூப்பிடுவார்களாம்.
அப்போது எல்லாம் டேனியல் பாலாஜி நம்முடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அதை பெரிது படுத்தவில்லையாம். யாரும் டேனியல் என்று கூப்பிட்டாலும் அதற்கு ரியாக்ட் செய்து விடுவாராம். ஆனால் சித்தி சீரியலை தொடர்ந்து அடுத்ததாக "அலைகள்" சீரியலில் அவர் நடித்திருக்கிறார். அலைகள் சீரியலில் நடிக்கும் போது அந்த சீரியலின் டைட்டிலில் இவருடைய பெயர் இல்லவே இல்லையாம்.

இது குறித்து டேனியல் பாலாஜி இயக்குனர் தரப்பினரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். சீரியல் தொடங்கி இரண்டு வாரம் ஆன பிறகும் என்னுடைய பெயர் வரவில்லையே என்னாச்சு ஏன் என்று கேட்டுக்கொண்டே இருக்க அதுகுறித்து ஒருநாள் இயக்குனர் இவருக்கே போன் பண்ணி இருக்கிறார். நீங்க அடிக்கடி உங்க பெயர் போடலன்னு கேட்டுகிட்டே இருக்கீங்க? உங்களுக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு.
அந்த மார்க்கெட்க்காக மற்றும் டிஆர்பிஐ பார்த்துதான் நாங்க உங்களுக்கு இரண்டாவது சீரியல் வாய்ப்பு கொடுத்து இருக்கிறோம். ஆனால் எப்படி உங்கள் பெயரை நாங்கள் போடாமல் இருப்போம். ஒழுங்காக பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். மீண்டும் இவர் அதில் இருந்த பெயர்கள் எல்லாவற்றையும் பார்க்க அதில் என்னுடைய பெயர் இல்லையே சார் என்று சொல்ல, உங்கள் பெயர் டேனியல் பாலாஜி என்று இருக்கிறது பாருங்கள் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
அதற்கு டேனியல் பாலாஜி என்னுடைய பெயர் கிடையாது. "பாலாஜி" தான் என்று சொல்ல, நீங்கள் டேனியல் பாலாஜி என்று கூப்பிட்டாலே ரியாக்ட் செய்வதால் நாங்கள் அந்த பெயரை பயன்படுத்திக் கொண்டோம். பாலாஜி என்பதை விடவும் டேனியல் பாலாஜி என்பதுதான் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதனால் இந்த பெயரையே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல பிறகு தான் நானும் சரி என்று அந்த பெயருக்கு ஒத்துக் கொண்டேன்.அது என்னுடைய அடையாளமாக பிறகு மாறியது என்று ஒரு பேட்டியில் டேனியல் பாலாஜி பேசி இருக்கிறார். இந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications