நடிகர் தர்ஷனுக்கு கல்யாணமா? பொண்ணு கூட இந்த நடிகையா? திடீரென வெளிவந்த போட்டோ! குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: "கனா" படத்தில் நடித்த நடிகர் தர்ஷனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று ஒரு போட்டோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் தர்ஷனோடு மணமேடையில் இருப்பது நடிகை "அஞ்சு குரியன்". இதனால் இவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து விட்டதா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் தர்ஷனை "கனா" திரைப்படத்தில் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாக காதலித்துக் கொண்டு அவருடைய வெற்றிக்கு துணையாக இருப்பார். அதிலும் "ஒத்தையடி பாதையில தாவி ஓடுற" என்ற பாடலில் தர்ஷனின் எக்ஸ்பிரஷன் வேற லெவலில் இளைஞர்களின் மத்தியில் கவரப்பட்டது. அதற்குப் பிறகு தர்ஷன் தும்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி தர்ஷனுக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்ட தர்ஷனுக்கு ஏகப்பட்ட வரவேற்பை கொடுத்தது.
அதுவும் இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான கேர்ள்ஸ் பாலோவர்ஸ் கூடிவிட்டனர். இந்த நிலையில் தான் தர்ஷனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று இணையத்தில் வைரலான ஒரு போட்டோ ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது. முக்கியமா அந்த போட்டோவில் மணப்பெண்ணாக அமர்ந்திருப்பவர் நடிகை அஞ்சு குரியன்.

நடிகை அஞ்சு குரியன், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் என நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் முக்கியமாக இவர் தமிழில் நேரம் சென்னை டு சிங்கப்பூர், சில நேரங்களில் சில மனிதர்கள், ஸ்மார்ட் போனும் சிம்ரனும் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் தான் இப்போது திருமணம் நடந்திருக்கிறது என்று ஒரு போட்டோ இணையத்தில் பரவி வரும் நிலையில் இது விளம்பர புகைப்படமாக கூட இருக்கலாம்.
தர்ஷனுக்கு திருமணம் என்றால் அதை அவர் வெளிப்படையாக ரசிகர்களிடம் கூறி இருப்பாரே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் தர்ஷன் அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களோடு பேசிக்கொண்டிருப்பவர்தான். அதனால் தன்னுடைய திருமணத்தைப் பற்றி அவர் எப்படியும் ரசிகர்களிடம் சொல்லி இருப்பார்.

அதே நேரத்தில் அந்த புகைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலங்களோ அல்லது ரசிகர்களுக்கு பரிச்சயமான தர்ஷன் நண்பர்கள் யாருமே இல்லை என்பதால் இந்த புகைப்படங்கள் விளம்பரங்களுக்காக எடுக்கப்பட்டதாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதில் எது உண்மை என்று தெளிவாக தெரியவில்லை. இது குறித்து தர்ஷன் இனி விளக்கம் கொடுத்தால் தான் உறுதியாக கூற முடியும்.
அதே நேரத்தில் தர்ஷனுக்கு திருமணம் நடந்திருந்தால் கண்டிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு தங்கையாக மாறிய சிவாங்கி இந்த விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருப்பார். ஆனால் சிவாங்கியும் இதுபற்றி எந்த புகைப்படத்தையோ அல்லது வாழ்த்துக்களையோ தெரிவிக்கவில்லை. இதனால் இது உறுதியாக விளம்பர புகைப்படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications