பாஜகவை விட்டு விலகி.. தவெகவில் இணைய போகிறேன்.. ஏனென்றால்! மலையாள நடிகர் தேவன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது சினிமா நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார் என்று பார்த்தவர்கள் பலர். ஆனால் முதல் தேர்தலிலேயே தவெக பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு அரசியல் கணக்குகளே மாறிவிட்டன. இப்போது அந்த வெற்றிக்கு பிறகு தவெக கட்சிக்கு வருபவர்களின் பட்டியலும் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் கேரளாவில் சேர்ந்த பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான தேவன் பெயரும் தற்போது இணைந்திருக்கிறது.

நடிகர் தேவன் அரசியல் பயணம்

தேவன் ஏற்கனவே அரசியலுக்கு புதியவர் கிடையாது. 2002 ஆம் ஆண்டு கேரளா மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கியவர். 2004 மற்றும் 2006 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு நவ கேரளா மக்கள் கட்சி என்று அமைப்பை மீண்டும் தொடங்கினார். ஆனால் அடுத்த ஆண்டு அதாவது 2021 இல் அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்து பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

இப்படியாக பல வருடங்கள் பாஜகவில் இருந்த தேவன் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். ஏன் விலகினார்? அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்விகளுக்கு அவரே தற்போது பதில் சொல்லி இருக்கிறார். பாஜகவில் தீவிரமாகவும், துணிச்சலாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வேலை பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் தனது அரசியல் லட்சியத்தையும், திட்டங்களையும் பாஜகவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

Devan Actor TVK vijay

பாஜகவை விட்டு விலகல்

அது மட்டும் அல்லாமல் தன்னை கட்சியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்திருக்க முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவதில் விருப்பமில்லை என்றுதான் நினைக்கிறேன். பணம் ஈட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை நான் எதிர்த்தேன். இதன் காரணமாகவே 2004 -2025 காலகட்டத்தில் பாஜகவில் இருந்து விலகுவது குறித்து யோசிக்க தொடங்கினேன்.

விஜய் கட்சியுடன் பேச்சு வர்த்தை

அங்கே தொடர்ந்து இருந்தால் அரசியல்வாதியாக தனது லட்சியம் நிறைவாராது என்று முடிவு எடுத்தேன். அதற்குப் பிறகு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதைப் பார்த்து ஜோசப் விஜய் சிலரை என்னிடம் அனுப்பி தமிழக வெற்றிகா கழகத்தில் இணைய எனக்கு விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார். எங்களுக்குள் மிகவும் விரிவான சுவாரசியமான ஒரு பேச்சு நடந்தது. கடைசியாக சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினோம்.

கொள்கை அளவில் நான் அதற்கு சம்மதித்தேன். எனவே ஜோசப் விஜய்யை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் சந்திப்பதற்காக செப்டம்பர் எனக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். அந்த சந்திப்புக்கான வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன் எனவே இறைவனின் அருளால் நான் விரைவில் தவெகவில் இணைவேன் என்று கூறியிருக்கிறார்.

சினிமா பிரபலங்களின் இணைவு

2026 தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு பல கட்சியிலிருந்தும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் திரைத்துறை சார்ந்தவர்களின் கவனமும் அதிகரித்து இருக்கிறது. நடிகர் மன்சூர் அலிகான் இயக்குனர் ஆர்வி உதயகுமார் உள்ளிட்டோர் ஜூன் மாதத்தில் தவெகவில் இணைந்தனர்.

அதேபோல நடிகர், தயாரிப்பாளர் பஷீர் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஜூலை மாதத்தில் தவெகவில் இணைந்திருக்கிறார். காமெடி நடிகர் சீனிவாசனும் இணைந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது தேவனும் இணைய இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+