நயன்தாராவின் நச்சரிப்பு? கூட்டை உடைத்து வெளியே வந்த தனுஷ்.. மெசேஜ் கேட்டுச்சா? மலைத்த சினிமா உலகம்
சென்னை: குபேரன் பட விழாவில் தனுஷ் பேசும்போது, "இருட்டுல நான் வழி தவறி தொலைந்து போகும்போது என் ஒவ்வொரு ரசிகனும் தீப்பந்தம் ஏந்தி என்னை வழிநடத்தி கூட்டி செல்கிறார்கள். என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள். என் ரசிகர்களின் உதவியுடன் நான் மேலே சென்று கொண்டே இருப்பேன். இதை நீங்க காலி பண்ணனும் நினைத்தீர்கள் என்றால் அது உங்களின் முட்டாள் தனம். உங்களால ஒரு செங்கலக்கூட ஆட்ட முடியாது" என்றார். தனுஷின் இந்த பேச்சுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சினிமாவில் ஒருவரை மட்டுமே குறிவைத்து, இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்துவது நிறையவே உள்ளது.. விவாகரத்து எங்கே நடந்தாலும் அதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்கிறார்கள்..

ரவி மோகன் - ஆர்த்தி
இது உச்சபட்சமாக ரவி மோகன் விவாகரத்திலும் நடந்தது.. தனுஷூடன் எப்போதோ ஆர்த்தி இயல்பாக எடுத்து கொண்ட போட்டோவை , இப்போது விவாகரத்து நேரத்தில் கொண்டுவந்து, அதை பூதாகரமாக பேச வைத்தார் சுசித்ரா என்ற பாடகி.
அதேபோல, ரஜினிகாந்த்தின் மருமகன் என்பதால்தான், தனுஷூக்கு இப்படியொரு வளர்ச்சி கிடைத்தது.. இல்லாவிட்டால் தனுஷை யாருக்கு அடையாளம் தெரியும்? என்பதுபோல தனுஷ் காதுபடவே பேசினார்களாம்.. ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாதபோதுகூட, தனுஷ் சென்று பார்த்து வந்துள்ளார். ஆனாலும், தனுஷ் மீது அவதூறுகளை சினிமா வட்டாரத்தில் பரப்புகிறார்கள்.
நயன்தாரா அறிக்கை
இதற்கு பிறகு நானும் ரவுடிதான் படத்திற்காக நயன்தாராவுடனான ரூ.10 கோடி கேட்டு மோதல் நடந்தது. இது தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும்போதுதான், திடீரென மீடியாவில் அறிக்கை விட்டு பரபரப்பாக்கிவிட்டார் நயன்தாரா.. ஆனால், இப்போதுவரை நயன்தாரா விவகாரம் என்றில்லை, தன்மீது பழி சுமத்தப்படுவது உட்பட எது சம்பந்தமாகவும் தனுஷ் எதுவுமே பொதுவெளியில் பேசவில்லை..
கொட்டுக்காளி பட விழாவில், நானேதான் வளர்ந்தேன் என்று சிவகார்த்திகேயன் பேசியபோதும்கூட, இதற்கு தனுஷ் ரியாக்ட் செய்யவில்லை... சினிமா வட்டாரத்தில் தனுஷ் மீது குற்றம் சாட்டுபவர்களும் சரியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இப்படியான அழுத்தங்களுக்கு நடுவில், ராயன் என்ற படத்தை எடுத்து வெற்றி பெற வைத்தார். அந்தவகையில் தயாரிப்பாளராக, இயக்குனராக, வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.
எதிர்ப்புகளை சமாளித்த தனுஷ்
கஸ்தூரி ராஜாவுக்கு மகனே இல்லை என்றுகூட ஒரு சர்ச்சை முன்பு கிளம்பியது.. இதையெல்லாம் தாங்கி கொள்ள தனி மனசு வேண்டும்.. அதேபோல சொந்த வாழ்க்கையில் விவாகரத்து நடந்தது.. இப்போது இட்லி கடை பட சம்பந்தமான டென்ஷனும் அவருக்கு உள்ளது.. இதுபோன்ற சூழலில்தான் மேடையில் வெடித்து பேசியிருக்கிறார் தனுஷ்..
ஆரம்ப காலத்தில் விஜய்க்கு எஸ்ஏ சந்திரசேகர் போல, தனுஷூக்கு கஸ்தூரிராஜா உயர்த்திவிட்டிருக்கலாம். இன்று விஜய்க்கு ஒருமுகம்தான் உள்ளது.. ஆனால் தனுஷ் ஒரு இயக்குனராகவும் உள்ளார். தயாப்பாளராகவும் உள்ளார்..
வளர்ச்சியில் பங்கு
ரஜினியால்தான் தனுஷ் வந்தார் என்றால், ரஜினி யாரால் வந்தார்? பாலச்சந்தர் என்பவர் காரணமாக இருக்கிறார. இப்படி ஒருவரின் வளர்ச்சியில் இன்னொருவரின் பங்கு இருக்கும்.. அதேபோல ஒரு தந்தையால் மகன் உயர்வு பெறுவதும் குற்றம் கிடையாது..
தன்னுடைய வேர்வை துளியால் உழைத்து முன்னுக்கு வந்துள்ளதால், இதிலிருந்து ஒரு செங்கல்லைகூட உருவ முடியாது என்று தனுஷ் பேசியிருக்கிறார்.. இதில் நயன்தாரா, ரஜினி என யாரையுமே குறிப்பிட்டு பேசவில்லை..
ஒருபக்கம் சினிமாவில் நிலவும் அரசியல், மறுபக்கம் குடும்பத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளால் மனம்வெடித்து பேசியிருப்பதாகவே தெரிகிறது.. குடும்ப விவகாரம் வெறும் பேப்பரில்தான் உள்ளது.. மகனின் பட்டமளிப்பு விழாவில், தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே மகனை கட்டி அரவணைத்தபோது, அந்த விவாகரத்து எல்லாமே தூள் தூளாக நொறுங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications