Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கா காட்டிய பச்சை கொடி! நடிகரின் கையை பிடித்து காதில் கிசுகிசுத்த பிரபல நடிகை! ரெண்டாவது திருமணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை மிருணாள் தாகூர் பிரபல தமிழ் நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இதுதொடர்பாக நடந்த இரவு பார்ட்டியில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டார். இந்த போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகின. இப்படி அடுத்தடுத்து நிகழ்வுகளில் இருவரும் சேர்ந்தே வருவதால் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu என்ற சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "குபேரா படத்தின் ஆடியோ லான்ச்சில் உச்சக்கட்ட ஆவேசத்தில் தனுஷ் பேசியிருந்தார்.. ஒரு செங்கல்லைகூட பிடுங்க முடியாது என்று கடுங்கோபத்தில் சொல்லியிருந்தார் தனுஷ்.. காரணம், தன்னை பற்றி தொடர்ந்துவரும் வதந்திகள், சர்ச்சைகளை கண்டுதான் கோபம் கொண்டார்..

Television Actor Dhanush actress mrunalthakur

கோலிவுட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு தனுஷ்தான் காரணம், குடும்ப நல நீதிமன்றங்களில் யாருக்கு விவாகரத்து என்றாலும், அதற்கு தனுஷ்தான் காரணம் என்றே சித்தரித்து வருகிறார்கள்.. போதாக்குறைக்கு சுசித்ரா மாதிரியான நபர்கள், எரிகிற நெருப்பில் ஒயிட்பெட்ரோலை ஊற்றி செல்வது, இது எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள்

இதில் உண்மை உள்ளதா? பொய்யா? என்ற ஆராய்ச்சியையும் தாண்டி, ஒரு நடிகர் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்? இதுவே வேறு நடிகர்களாக இருந்தால் உடனுக்குடன் ரியாக்‌ஷனை காட்டியிருப்பார்கள். தோளுக்கு மேல் வளர்ந்த தனுஷின் 2 பிள்ளைகள், இதுபோன்ற கிசுகிசுக்களை எப்படி எதிர்கொள்வார்கள்? பள்ளியில், கல்லூரியில் அவர்கள் படும் வேதனை, அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதெல்லாம் சேர்ந்துதான் தனுஷ் அன்று கோபப்பட்டு பேசியதற்கான காரணம்.

மீண்டும் தீயாய் பரவும் செய்தி

இப்போது மீண்டும் தனுஷ் விவகாரம் ஒன்று, பாலிவுட்டில் தீயாய் ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷூம் மிர்னாள் தாகூர் நடிகையும் ஒன்றாக பாலிவுட்டில் குடித்தனம் நடத்துவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதால், அதற்கு இரு குடும்பத்தினரும் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ் எங்கெல்லாம் போகிறாரா, அவர் பின்னாடியே ஒட்டுமொத்த பாலிவுட் மீடியாக்களும் ஸ்பைக் கேமிரா வைத்து துரத்துவதுபோல, துரத்தி கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால், எதைப்பற்றியும் தனுஷ் கவலைப்படவில்லை.. என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்..

எனினும், தனுஷூம் மிர்னாள் தாகூர் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? திருமணம் செய்து கொள்ள போகிறார்களா? என்று தெரியவில்லை.. ஒன்றல்ல, இரண்டல்ல, 3 நிகழ்ச்சிகளை பாலிவுட் மீடியாக்கள் எழுதியிருக்கின்றன..

கையை பிடித்து பேசி

மிருனாள் தாக்கூர் தன்னுடைய பிறந்தநாளை விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல், வீட்டிலேயே சிம்பிளாக நடத்தியிருந்தார்.. இதற்கு அவருடைய உறவினர்கள், நெருக்கமானவர்கள் மட்டும் வந்திருந்தார்.. அப்போதுதான் எதிர்பாராத விதமாக தனுஷ், உள்ளே வந்தார்.. தனுஷின் கையை பிடித்து வரவேற்று அழைத்துச்சென்ற நடிகை, கேக் வெட்டினார்.. அவரிடம் தனியாக பேசினார், அங்கிருந்துதான் பாலிவுட் மீடியாக்கள் பேச துவங்கின.

கஜோல் நடித்த மா என்ற படத்தின் பிரிவியூ ஷோவுக்கு, தனுஷும், மிருணாளும் ஒன்றாக கை கோர்த்தபடி வந்திருந்தனர்,.. உடனே இந்த நிகழ்வும் தீயாய் அங்குள்ள மீடியாவில் பற்றிக் கொண்டது..

குடும்பத்தினர் பச்சைக்கொடி

அதைவிட முக்கியமாக, தனுஷின் 2 அக்காக்களும், மிருணாளின் இன்ஸ்டாவை ஃபாலோ செய்ய துவங்கினர்.. பிறகு அவர்களின் இன்ஸ்டாவை, மிர்னாளும் ஃபாலோ செய்து வருகிறார். அந்தவகையில், ஏறத்தாழ தனுஷ் குடும்பத்திலேயே இவர்களின் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது. கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாளில் அதை வெளிப்படுத்தவும் செய்துவிட்டார்கள்..

தங்கள் மகனுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும் என்று குடும்பத்தினர் இவ்வாறு நினைப்பது சரியே என்று இணையத்தில் ஒருசாரார் கருத்து கூறிவருகிறார்கள்.

ஆனால் மேலும் பலர், "ரஜினிகாந்த் என்ற விசிட்டிங் கார்டை வைத்துதான், அவரது மகளை தனுஷ் திருமணம் செய்தது, பாலிவுட், ஹாலிவுட் வரை செல்ல காரணமாக இருந்தது.. ரஜினி இல்லையென்றால் இது எதுவுமே நடந்திருக்காது.. அவர் மருமகனாக நடத்தாமல் மகனாகவே நடத்தினார்..

நீர்த்துப்போன கிசுகிசு

ஆனால் குபேரா விழாவில் ரஜினி மாதிரியே வாயை வைத்துக்கொண்டு பேசி, ரஜினி ரசிகர்களையே தனுஷ் கடுப்பாக்கிவிட்டார்.. அவர் பொண்ணு வேண்டாம், ஆனால், தலைவர் மட்டும் இமிடேட் செய்ய வேண்டுமா? ரஜினையை வைத்து மேலே வந்துவிட்டு, அந்த ரஜினி பெண்ணையே விட்டுவிட்டு செல்வது சரியல்ல, ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும்" என்றெல்லாம் இணையத்தில் சலசலப்புகள் கிளம்பி உள்ளன.

எனினும் தனுஷும், மிருணாளும் திருமணம் விரைவில் அறிவிக்கப்படுமா? அல்லது இதுவும் நீர்த்துப்போய் கிசுகிசுவாகவே போகுமா? தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+