எதிர்நீச்சல் ஆதிரைக்கு லவ் ப்ரொபோஸ் செய்த நடிகர் தனுஷ்.. மேடையில் சுவாரஸ்யம்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் விஜே சத்யா தேவராஜன் நடித்து வருகிறார்.
இவர் சீரியலில் நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜே சத்யா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சத்தியா சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் இடம் கேள்வி கேட்க அப்போது தனுஷ் சத்யாவிடம் காதல் ப்ரபோஸ் செய்திருக்கிறார்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வீட்டில் அடக்குமுறைக்கு ஆளாகும் பெண்கள் சுயமாக எப்படி வெளியே வந்து இந்த சமூகத்தில் ஜொலிக்க வேண்டும் என்பது பற்றியதாக இந்த சீரியலின் கதை இருந்தாலும் இப்போதுதான் அதற்கான பயணம் தொடங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்களும், சுவாரசியமான கதைக்களம் வந்து கொண்டே இருப்பதால் இந்த சீரியலை ரசிகர்கள் அதிகமாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சத்யா தேவராஜன். இவர் ஆரம்பத்தில் ஒரு விஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் மூலமாகத்தான் நடிகையாக மாறியிருக்கிறார். இந்த சீரியலில் இவர்கள் சில மாதங்கள் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்குள் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கவா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்து இருக்கிறார். ஏற்கனவே நடிக்க தொடங்கிய சீரியல் சில மாதங்கள் ஆகி இருப்பதால் இன்னொரு சீரியலில் எப்படி நடிக்க முடியும் என்றும் நினைத்திருக்கிறார். பிறகு நடித்துதான் பார்ப்போம் என்று தான் எதிர்நீச்சல் சீரியலில் கமிட் ஆனாராம்.
இந்த நிலையில் சத்யா தேவராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகர் தனுஷ் 2018 ஆம் ஆண்டு அனேகன் என்னும் திரைப்பட பிரமோஷனுக்காக ரசிகர்களோடு உரையாடும் நிகழ்ச்சியில் பட குழுவினர் உடன் இணைந்து பங்கு எடுத்திருந்தார். அப்போது ரசிகர்களில் ஒருவராக சத்தியா தனுஷிடம்," நீங்கள் படத்துல நிறைய ஹீரோயின்களுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி இருக்கீங்க. நான் பார்த்திருக்கேன். ஆனால் நிஜத்துல இப்ப இந்த நிகழ்ச்சியில் இருக்கிற பொண்ணுங்க யாருகிட்டயாவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் பண்ண முடியுமா..!?" என்று கேட்கிறார்.

இதற்கு தனுஷ் சத்யா விடமே, "உனக்கு என்னை புடிச்சிருக்கா..? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. ஐ லவ் யூ.." என்று நடிகர் கார்த்திக் குரலில் ப்ரபோஸ் செய்து இருக்கிறார். தனுஷின் எந்த பதிலை கேட்டு சத்தியா மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சத்தியா இப்போது பகிர்ந்து இருக்கும் நிலையில் இந்த வீடியோவை கரிகாலன் பார்த்தால் உயிரை விட்டுடுவானே என்று சில ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications