Raayan OTT: அமேசான் பிரைமில் வெளியானது ராயன்.. வீக் என்ட் கொண்டாட ரெடியா மக்களே
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்த நிலையில் இப்போது அமேசான் பிரைம் ஓடிடிக்கு வந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படமான ராயல் திரைப்படம் நடிகர் தனுஷுக்கு 50-வது திரைப்படமாக வெளிவந்தது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பிரம்மாண்டமாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி இருந்த நிலையில் இந்த திரைப்படம் 150 கோடியை தாண்டி வசூல் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகர்கள் தங்களுடைய மொத்த அர்ப்பணிப்போடு நடித்திருந்தனர். அதோடு தனுஷை தாண்டி அவருக்கு தங்கையாக நடித்த துஷாரா விஜயன் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அதோடு இந்த திரைப்படத்தில் பாடல்கள் காட்சிகள் பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது.
அதிலும் "அடங்காத அசுரன்" பாடலில் இடம்பெற்ற உசுரே நீதானே என்ற வரிகள் பலருடைய ரிங்க்டோனாகவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுபோல "வாட்டர் பாக்கெட்" பாடலும் பெரிய அளவில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் மிதமிஞ்சிய அளவில் ஆக்சன் காட்சிகளும் இருப்பதால் இது மீண்டும் தனுஷ் நடித்த அசுரனை நினைவு படுத்துகிறது.
ஏஆர் ரகுமானின் இசைக்கு என்றும் வயதே ஆகாது என்று சொல்லும் வகையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பலருடைய மனம் கவர்ந்து முணுமுணுக்கப்பட்டு வருகிறது. தங்கலான், டிமான்டி காலரி, ரகு தாத்தா போன்ற புதுப் படங்கள் வருகையால் ராயன் ஓடிடிக்கு வந்துவிட்டது.

ராயன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரேம் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதனால் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 23ம் தேதியான இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் sun next ஆப்பிலும் வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கல்கி படமும் அமேசானில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்போது ராயன் ரிலீஸ் ஆகியுள்ளது. எனவே வீக் எண்டை பிளாக்பஸ்டர் படங்களுடன் கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்படத்தில் அதிகமான விறுவிறுப்பு இருந்தாலும் ரத்த காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருந்தது. தியேட்டரில் குழந்தைகளோடு இந்த திரைப்படத்தை பார்க்க முடியாது என்று சொல்லும் வகையில் தான் இந்த படம் முழுக்க ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இனி ஓடிடியில் வெளியாகும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இந்த படத்தை பார்ப்பார்கள். அதனால் குழந்தைகளை தவிர்த்து இந்த படத்தை பார்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications